
அதிக மழை காரணமாக சாத்தான்குளம் மெயின்ரோட்டில் முற்றிலும் தேங்கிய மழை மற்றும் சாக்கடை தண்ணீருடன் பொது மக்கள் நடந்து செல்வதும் வாகனங்கள் சொல்லும்போது அந்த சாக்கடை கழிவு நீர் கடைகளுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் தொற்று நோய்பரப்பும் அபாயமும் வர்த்தகர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் கடைகளை கடைகளுக்கும் நீர் புகுந்து பொருட்களை நாசபடுத்தியும் வருகிறது.
ஏற்கனவே கடந்த வருடம் தைக்கா தெரு தொடர்சியாக மெயின் ரோட்டில் கழிவுநீர் சானல் அமைக்கும் போதே முழுவதுமாக சரி செய்து புது வேத கோவில் அருகே சானலை இணைக்க கூறினர். ஆனால் சாத்தான்குளம் பேரூராட்சி நிர்வாகம் அரைகுறையாக பாதி தூரத்திற்கு மட்டும் அதாவது சவுரிமுத்து நாடார் தெருவரை மட்டுமே சானலின் வேலை முடித்து நிறுத்திய காரணத்தால் அதன் பிறகு உள்ள சானலில் மீண்டும் அதிக அடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதை போர்கால அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை/