தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) சுயநிதிப் பிரிவின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா துவக்க விழா, இன்று கல்லூரி கலையரங்கில் “நம்பிக்கையும் சிறப்பும் மிளிரும் பாரம்பரியம்” என்ற கருப்பொருளில் நடைபெற்றது.
இவ்விழாவில் செர்வைட் மாகாணத் தலைவர் அருட்சகோதரி மேரி ஜாய்ஸ் பேபி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். கல்லூரியின் செயலாளர் அருட்சகோதரி எஸ். குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி சி. சிபானா, துணை முதல்வர் அருட்சகோதரி எம். எஸ். எழிலரசி மற்றும் சுயநிதிப் பிரிவு இயக்குநர் அருட்சகோதரி அ. ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி விழாவினைச் சிறப்பாக நடத்தினார்கள்.
மேலும், கல்லூரியின் முன்னாள் செயலாளர்கள், முன்னாள் முதல்வர் ஜெசி பெர்னாண்டோ, சுயநிதிப் பிரிவின் முன்னாள் இயக்குநர்கள், முன்னாள் மாணவிகள், நலவிரும்பிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
சுயநிதிப் பிரிவின் 25 ஆண்டுகால கல்விச் சேவையை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இவ்விழாவில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


