என்னைப்பற்றி

வரலாற்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவின் சிறப்புகள்.*

1. 144 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலேயே முதன் முதல் அகழாய்வு நடந்த ஆதிச்சநல்லூரில் வெளிநாட்டவர்கள் சைட் அருங்காட்சியகம் இங்கு அமைக்க வேண்டும் என எழுதி வைத்துச் சென்றனர். ஆனால் பல்வேறு அகழாய்வு இங்கு நடந்தும் அருங்காட்சியம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. மேலும் 2004ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வு பணியின் அறிக்கை 2017 வரை வெளிவரவில்லை. எனவே இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் அறிக்கையையும், மீண்டும் இங்கு அகழாய்வு நடைபெறவும், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கவும் உத்தரவு பெற்றுத் தந்தவர். மேலும் சிவகளை, கொற்கை மற்றும் தாமிரபரணிக்கரையில் அகழாய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்றம் மூலம் அரசாணை பெற்றுத்தந்தவர். இந்த வழக்கு மூலம் கர்நாடகாவில் உள்ள 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழகத்திற்கு வர வேண்டும் என உத்தரவு பெற்று தந்தவர்.
2. கடந்த 23 வருடங்களாக தாமிரபரணியில் வைகாசி விசாகம் அன்று பிறந்த நாளை கொண்டாடி, தாமிரபரணியைக் காக்க உறுதி மொழியை தன் நண்பர்களுடன் எடுத்து வந்தார். தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தாமிரபரணியைச் சுத்தம் செய்யும் பணியைக் கடந்த 5 வருடங்களாக நடத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இவர் எழுதிய 57 நூல்களிலும் தாமிரபரணி புகழ் எழுதப்பட்டிருக்கும்.
3. ஒரு நதியைப்பற்றி அதிக நூல் எழுதியவர். தாமிரபரணியைத் தலைப்பாகக் கொண்டு தலைத்தாமிரபரணி, தாமிரபரணி கரையினிலே, தவழ்ந்து வரும் தாமிரபரணி, நவீன தாமிரபரணி மகாத்மியம், தரணி போற்றும் பரணி உள்படப் பல நூல்களை எழுதியுள்ளார்.
4. களரி என்பது தமிழர் கலை. தற்போது கேரளா அதை உரிமை கொண்டாடி வருகிறது. இதை மீட்டெடுத்து களரி தமிழர் கலைதான் என நிரூபிக்க உலக களரி அடிமுறை கூட்டமைப்பினருடன் இணைந்து நூல் எழுதி வருகிறார். இதில் இவர் மூன்று பாகம் எழுதி முடித்துள்ளார். இதில் முதல் பாகம் களரி அடிமுறை 1 என்ற பெயரில் முழு கலரில் புத்தகமாக வெளியாகி உள்ளது.
5. உலக நதிகள் வரலாற்றில் க்யூ.ஆர் கோடு வசதியுடன் 144 பகுதியையும் வீடியோ மூலம் பார்க்கும் வசதி கொண்ட நூலை நவீன தாமிரபரணி என்று உருவாக்கியவர்.
6. 20 ஜமீன்தார்கள் வரலாற்றைத் தொகுத்து தென்னாட்டு ஜமீன்தார்கள் என்ற 1000 பக்கம் நூலை எழுதியது. மேற்குத்தொடர்ச்சி மலையில் பொதிகை, அத்ரி, தோரணமலை, குற்றால மலைகள் குறித்து சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை, அத்ரிமலை யாத்திரை, தோரண மலை யாத்திரை என்று பல நூல்கள் எழுதியவர்.
7. தமிழ் வளர்க்க பாடுபட்ட சித்தர்கள் அறிஞர்கள் சமாதுகளைத் தேடி அதைப் தினசரி நாளிதழ்களில் தொடராய் எழுதி அருள்தரும் அதிசய சித்தர்கள் என்ற பெயரில் நூல் எழுதியவர்.
8. தற்போதும் எழுத்து பணியோடு, தாமிரபரணியைச் சுத்தப்படுத்தி மரங்கள் நடும் பணி, மறைந்து போன சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாற்றைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்குத் தமிழக அரசு தமிழ்ச்செம்மல் விருது (2020) வழங்கி கௌரவித்து உள்ளது.

9. தாமிரபரணி, மேற்கு தொடர்ச்சி மலைகள், ஜமீன்தார்கள் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளுக்கு களப்பணியாக சென்று 58 புத்தகங்கள் எழுதியவர்.

10. 75 வருடம் சிறப்பு மிக்க சைவசிந்தாந்த நூல் பதிப்பு கழகம், விகடன் பிரசுரம், தினத்தந்தி பதிப்பகம், தி இந்து தமிழ் திசை பதிப்பகம், சூரியன் பதிப்பகம், காவ்யா பதிப்பகம்,தினமலரின் தாமரை பிரதர்ஸ் மீடியா, பொன்சொர்ணா போன்ற பிரபலமான பதிப்பகங்களில் நூல் எழுதியவர்.

11. ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களை ஆய்வு செய்து நூல் எழுதியவர். ஆதிச்சநல்லூரில் 2004 ல் நடந்த ஆய்வறிக்கையை சமர்பிக்காத மத்திய அரசை கண்டித்து மதுரை ஐகோர்டு மூலம் வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டவர்.

12. மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலை, தோரண மலை, அத்ரி மலை, குற்றால மலை குறித்து களப்பணி செய்து நூல் எழுதியவர்.தொடர்ந்து மகேந்திரகிரி மலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
13. பல ஊடகங்களில் 3,500 க்கு மேற்பட்ட படைப்புகளை தந்தவர்.

14. தாமிரபரணியை பற்றி மிகப்பெரிய எளிய நூலான 1000ம் பக்கம்கொண்ட தலைத் தாமிரபரணி நூலை எழுதியவர். தாமிரபரணியை மூன்றாக பிரிந்து தலைத்தாமிரபரணி , இடைத்தாமிரபரணி, கடைத்தாமிரபரணி என நூல் எழுத திட்டமிட்டு, தற்போது இடைத்தாமிரபரணி, கடைத்தாமிரபரணி நூலை எழுத பயணித்துக்கொண்டிருப்பவர்.

15. தென்பாண்டிச்சீமையிலே பாகம் -1, பாகம்-2 என இரண்டு நூல்களை தலா 1000ம் பக்கம் கொண்டது. இதில் முதல் நூல் காஞ்சிபுரம் உலக தமிழ் அரங்கத்தில் முதல் பரிசு பெற்றது. பாகம்-2 நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் திரு.சமயமூர்த்தி அவர்களின் அணிந்துரையுடன் வெளியானது. இரண்டுமே ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தினை பறைசாற்றும் விதமாக உருவான நூலாகும்.

16. இவரை பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரி மாணவி அந்தோணியம்மாள் ஆய்வு செய்து எம்.பில் பட்டம் பெற்றுள்ளார்.

17. இவரை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற பாளையங்கோட்டையை சேர்ந்தவரும், எழுத்தாளரின் குருநாதர் அகஸ்தீஸ்வரன் என்பவரும், தெற்கு கள்ளிகுளம் தெட்சண மாற நாடார் கல்லூரி தமிழ் துறை (சுயநிதி) தலைவரான திசையன்விளை கிரிஜா என்பவரும் தனித்தனியாக பட்டம் பெற முயற்சித்து வருகிறார்கள்.

18. பஸ் நடத்துனராக வாழ்க்கையை தொடர்ந்து மேடை நாடக நடிகராய், நெல்லை வானொலி நாடக எழுத்தாளராய், நூல் ஆசிரியராக, சினிமா நடிகராக வலம் வந்து பல விருதுகளை பெற்றவர். சொந்தமாக தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் பொன்சொர்ணா ஸ்டுடியோ என்ற புகைப்பட நிறுவனத்தை நடத்தி வருவதோடு, பொன்சொர்ணா பதிப்பகத்தினை நடத்தி, தனது நூல்களை வெளியிட்டு வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தனது மகன் அபிஷ் விக்னேஷ் மூலமாக மீடியா கிருக்கன் என்ற யூ டியூப் சேனலும், தனது சிஷ்யர் சுடலைமணி செல்வன் மூலமாக ஸ்ரீவைகுண்டம் டூடே நீயூஸ் என்ற யூ டியூப் சேனலும் நடத்தி வருகிறார். இவர் பெயரில் www.muthalankurichikamarasu.com என்ற வெப்சைட்டும் நடத்தி வருகிறார். இதில் இவரது நூலை தபாலிலும், இமெயில் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.

19. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா புஷ்கர திருவிழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றை சீரமைக்க வேண்டும் என்றும், சாக்கடைகள் கலக்காமல் தடுக்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தவர். அதன் பயனாக வெற்றியும் கண்டவர். இந்த சமயத்தில் இவர் வெளியிட்ட நவீன தாமிரபரணி மகாத்மியம் என்னும்நூல் உலக நதிகள் வரலாற்றில் முதல் முதலாக பார்கோடு வசதியுடன் உருவாக்கப்பட்ட நூலாகும். இந்த நூல் ஆன்மிக அன்பர்களிடம் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி கரை கோயில்கள் பற்றி வெளி வந்த முழுமையான நூலாகும்.

20. பல்வேறு கட்டத்தில் கல்லூரிகள் நடத்தும் கருத்தரங்களில் இவர் கட்டுரையும், இவரைபற்றி மற்ற ஆய்வாளர்கள் எழுதும் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. ச.வே.சு குறித்து நெல்லை மதிதா இந்து கல்லூரியில் தமிழ் துறை நடத்திய கருத்தரங்கு கட்டுரையும், பாளை சேவியர் கல்லூரி தமிழ்துறை நடந்திய தாமிரபரணி நதி சார்ந்த பண்ணாட்டு கருத்தரங்கத்தில் இவரை பற்றி இரண்டு கட்டுரையும் வாசிக்கப்பட்டுள்ளது.

21. நெல்லையில் இருந்து வெளிவரும் மாத இதழ் சான்றோர் மலரில் ஆசிரியர் குழுவில் இவர் பணியாற்றி வருகிறார். பிரபல பதிப்பகமான காவ்யா காலாண்டு இதழில் ஆசிரியர் குழுவில் இவர் பணியாற்றி வருகிறார். மும்பையில் இருந்து வெளிவரும் வார இதழ் வணக்கம் மும்பை இதழில் சிறப்பு செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.
22.இந்தியாவின் 75 வது சுதந்திர போராட்டத்தினை யட்டி தூத்துக்குடிமாவட்டத்தில் அறியப்படாத சுதந்திர பேராட்ட வீரர்கள் குறித்து இவர் எழுதிய நூலை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ளார்.

விலாசம்-
முத்தாலங்குறிச்சி காமராசு
எழுத்தாளர்,
6/346 ரயில்வே ஸ்டேஷன் ரோடு,
செய்துங்கநல்லூர்,
தூத்துக்குடி மாவட்டம் - 628 809
தொடர்பு எண் - 9442834236 , 8760970002
04630 ;263917 04630;263043
Mail. [email protected]
Web –www. muthalankurichikamarasu.com
Youtube channel - media kirukkan, srivaikundam today new

இனி.. அவர் வரலாற்றை விரிவாக காணலாம்.

பிறப்பும் வளர்ப்பும்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா முத்தாலங்குறிச்சி எனும் தாமிரபரணிக்கரை கிராமத்தில் திரு. சங்கரசுப்பு& திருமதி சொர்ணம்மாள் தம்பதிக்கு இவர் பிறந்தார்.

பெயர்க்காரணம்

1967ல் முன்னால் முதல்வர் திரு.காமராஜர் அவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அப்போது இவரது குடும்பத்தில் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்தனர். நல்ல தலைவர் தோல்வி அடைந்து விட்டார். அவர் புகழ் நிலைத்து இருக்கவேண்டும் என காமராஜ் என இவருக்கு பெயர் வைத்தனர். பிற்காலத்தில் காமராஜரை போல யாரும் வாழ முடியாது. அவர் பெயரை வைக்க வேண்டும் என்றால் அதற்கு தனி தகுதி வேண்டும். தனக்கு அந்த தகுதி இல்லை, என தனது பெயரை காமராசு என மாற்றியது தனி கதை.

தாமிரபரணி கரையில் இருந்து சினிமா வரை

தனது துவக்கப் பள்ளி படிப்பை முத்தாலங்குறிச்சி புனித வளன் துவக்கப்பள்ளியில் படித்தார். 1978 ஆம் ஆண்டு இக் கிராமத்துக்கு பஸ் வசதி இல்லாத காரணத்தால் பஸ் விட ஏற்பாடு செய்யும் முயற்சியில் இவரது தந்தை சங்கரசுப்பு ஈடுபட்டார். அந்த சமயத்தில் தினமும் 2 டிக்கெட் இருந்தால் மட்டும் பஸ் விடுவோம் என்று கம்பெனி அதிபர் கூறிய காரணத்தால் இவரை 6ஆம் வகுப்பு படிக்க பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா நடுநிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்பு 7 முதல் 10ஆம் வகுப்பு வரை பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் இவரது படிப்பு தொடர்ந்து. மேல்படிப்பு படிக்க போதிய வசதி இல்லாத காரணத்தாலும், பாளையங்கோட்டை சென்று கல்வி கற்க இயலாமல் போய்விட்டது. எனவே மேல்நிலைப்பள்ளி படிப்பை கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது தினமும் 6 கிலோ மீட்டர் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணல்காட்டு வழியாகவும், அடர்ந்த காடு வழியாகவும், வயல்கரை வழியாகவும் நடந்தே சென்று கருங்குளத்தில் மேல்நிலைக் கல்வி பயின்றார்.

எழுத்தாளராக அறிமுகம்

6.03.1987 ல் “தேவி வார இதழில்” துணுக்கு எழுத்தாளராக அறிமுகமானார். அதன் பின்னர் மும்பைக்கு சென்று வேலை செய்தார். அப்போது அங்குள்ள “மராத்திய முரசு”, “போல்டு இந்தியா” ஆகிய பத்திரிகையில் சிறுகதை எழுதினார். தொடர்ந்து கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் போது நெல்லை வானொலி நேயரானார். அதில் நாடக நடிகராக முயற்சி செய்தபோது குரல் வளம் இல்லை என்று நிராகரிக்கப்பட்டார். விடாமுயற்சியால் நெல்லை வானொலியில் நமக்குள்ளே பகுதிக்கு கடிதம் எழுதினார். பின் வாசகராகவே வானொலியில் ஒலிபரப்பாகும் இளையபாரதம் நிகழ்ச்சியில் உரை, சிறுகதை எழுதி வாசித்தார்.
3.10.1988ஆம் நாள் இவரது “குருவை மிஞ்சிய சீடர்” எனும் உரை அறிமுகமானது. அதன் பிறகு 15 நிமிட “கண்டிஷன் கண்டிஷன்” எனும் நாடகம் ஒலிபரப்பானது. தொடர்ந்து அரை மணி நேர நாடகம் எழுதி, ஒரு மணி நேர நாடகம் எழுதும் எழுத்தாளராக உயர்ந்தார். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் (27.06.2010) நடந்த போது “என்று தணியும் இந்த தாகம்” என்னும் ஒரு மணி நேர நாடகம், அனைத்து வானொலியிலும் ஒலிபரப்பானது. இவரது நாடகமான “ரோபோ மருமகள்” எனும் அறிவியல் நாடகம் 7.10.2009 அன்றும், “மனம் சொல்லும் மௌனம்” என்ற மற்றொரு நாடகமும் நாடக விழாவில் நெல்லை வானொலி நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒலிபரப்பானது.
இந்த ஆண்டு வானொலி விழா நாடகத்தில் நெல்லை வானொலி சார்பில் இவரது நாடகமாக உயிர்மூச்சு தேர்வாகி 7.06.2019 அன்று இரவு தமிழகம், பாண்டிச்ச«ரியில் உள்ள அனைத்து வானொலிகளிலும் இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகியது.
இவர் ஆரம்பக் காலத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்தில் நடத்துனராக 1988 முதல் 1995 வரை பணியாற்றினார். 1996 முதல் 1999 வரை சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ மணிநாடாரிடம் உதவியாளராக வேலை பார்த்தார். இவற்றின் மூலம் கிடைத்த அனுபவத்தின் பிரதிபலிப்பு இவரது நாவல், சிறுகதை, கட்டுரை மற்றும் நூலில் இருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளில் தினகரன், தமிழ்முரசு, தினத்தந்தி, தினமலர், ராணி, மாலைமலர், கோகுலம் கதிர், மராத்திய முரசு, போல்டு இந்தியா, மும்பை தமிழ் டைம்ஸ், வணக்கம் மும்பை, சான்றோர் மலர், ஆல் இந்தியா ரேடியோ, நாடன் குரலோசை, சன் டிவி, வசந்த் டிவி, ஜி தமிழ், தந்தி டிவி உள்பட பல்வேறு ஊடகங்களில் சுமார் 3,050க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்துள்ளார். தற்போது செய்துங்கநல்லூரில் பொன்சொர்ணா ஸ்டூடியோ, பதிப்பகம் நடத்தி வருகிறார். தினகரன், தமிழ்முரசு நாளிதழின் செய்துங்கநல்லூர் பகுதி நேர நிருபராகவும் பணியாற்றி வருகிறார். தினத்தந்தி குழுமத்தில் இருந்து வெளிவரும் தினத்தந்தி, மாலை மலர், ராணி, கோகுலம் கதிர் போன்ற இதழ்களில்தொடர் கட்டுரை எழுதி வருகிறார்.

நாடகத்துறை

நாடகத்துறையில் சிறு வயதில் இருந்தே இவருக்கு ஆர்வம் அதிகம். இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே முத்தாலங்குறிச்சி அந்தோணியார் ஆலயத்திடலில் இவர் நடித்த நாடகம் அரேங்கேறியது. முதல் நாடகத்தில் ஒரு வார்த்தை வசனம் கூட பேச வெட்கப்பட்டு இடையிலேயே மேடையை விட்டு இறங்கியவர். அதனால் ஆசிரியையிடம் குட்டுப் பட்டார். இதன் பிறகு எப்படியாவது நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அகில இந்திய வானொலி நிலையத்தில் நடந்த நாடக நடிகர் தேர்வுக்கு சென்றார். அங்கேயும் உச்சரிப்பு சரியில்லை என்று நிராகரிக்கப்பட்டார். அப்போது தான் நாமே நாடகம் எழுதினால் என்ன என்று இவருக்கு தோன்றியது. எனவே பல நாடகங்கள் எழுதினார். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஆறாம்பண்ணை, வல்லக்குளம், கிளாக்குளம், வெட்டிக்குளம், புதுக்குளம் கிராமங்களில் இவரது நாடகங்கள் அரங்கேறியது.
வசந்த் டிவியில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மண்ணின் பெருமை பேசும் ‘‘நெல்லை மண் பேசும் சரித்திரம்’ என்னும் தொடரில் 75 வாரம் பங்காற்றினார். பின்னர் அந்த அனுபவம் எல்லாவற்றையும் தொகுத்து ‘‘தென் பாண்டிச் சீமையிலே பாகம் &1, தென்பாண்டிச்சீமையிலே பாகம் &2’’ ஆகிய 1,000 பக்கங்கள் கொண்ட 2 நூல்களை எழுதினார். இதில் இரண்டாவது நூல் 22.06.2013 அன்று நெல்லை கலெக்டர் சத்யமூர்த்தி தலைமையில் நெல்லை புத்தக கண்காட்சியில் வெளியானது. முதல் நூல் உலக அளவில் நடந்த சிறந்த நூல்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றது.
ஜி தமிழ் டிவியில் “நம்பினால் நம்புங்கள்” தொடரில் பணிபுரிந்து வருகிறார். எழுத்து துறையில் 33ஆம் ஆண்டை இந்த ஆண்டு கடக்கிறார். இந்த ஆண்டு இவருக்கு 52 வயது. எனவே, இந்த ஆண்டு தனது 50வது நூலை வெளியிட திட்டமிட்டு, முடித்துள்ளார். விகடன், தினத்தந்தி, தி இந்து தமிழ் திசை, சூரியன், சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம், காவ்யா,பொன்சொர்ணா உள்பட முன்னணி பதிப்பகங்களில் இருந்து இவரது நூல் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய ‘தலைத் தாமிரபரணி’ என்னும் 950பக்க நூல் தாமிரபரணி வரலாற்றில் மிகப்பெரிய எளிய தமிழ் நூல். இந்த நூல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும் உள்ளது. தொடர்ந்து இந்த நூலை செம்மை படுத்தி மறுபதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சினிமாத்துறை

கிராமங்களில் நாடகம் நடிக்கும்போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு ஆரம்ப காலகட்டத்திலேயே இருந்தது. நடிகரும், செய்துங்கநல்லூரை சேர்ந்தவருமான டாக்டர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி இவருடைய நாவலை திரைப்படமாக்க முயற்சி செய்து வருகிறார். அதற்கு முன்பாக இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
நடிகரும் இயக்குனருமான திரு.சேரன் அவர்கள் தயாரித்து, நடிகை திருமதி ரோகிணி அவர்கள் இயக்கிய “அப்பாவின் மீசை” என்ற திரைப்படத்தில் முதல் முறையாக நடிகராக அறிமுகமானார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
ராட்டினம் பிக்சர்ஸ் தயாரிப்பில் முத்துநகர் இயக்குனர் திரு.கே.எஸ். தங்கசாமி அவர்கள் இயக்கத்தில் “எட்டுத்திக்கும் மதயானை” படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் “நெல்லை சீமையிது” என்ற பாடலில் திருநெல்வேலியின் பெருமையினை பத்தமடை பாயி.... என தொடங்கி...இன்னும் நிறைய விஷயம் சொல்லலே..” என்ற 12 வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இந்தப் படம் திரைக்கு வந்து இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
இராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் இவரது நண்பர் தம்பி இப்ராகீம் அவர்கள் இயக்கிய “புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்” என்னும் திரைப்படத்தில் பஸ் கண்டக்டராக நடித்துள்ளார். அந்த படமும் சிறப்பாக வெளி வந்து வெற்றி பெற்றது.
இவரது இயக்கத்தில் “பொருநை சுடர்” என்ற ஆவணப் படம் வெளிவந்துள்ளது. கௌசானல் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இந்த ஆவணப் படத்தை திருஇருதய சகோதரர்கள் தயாரித்தனர்.
தற்போது இவர் எழுதி வெளியிட்ட தினத்தந்தியின் ‘அருள் தரும் அதிசய சித்தர்’ நூலுக்காக சென்னை புத்தக கண்காட்சியில் தினத்தந்தி ஸ்டாலில் சிறப்பு விருந்தினராக அமர்ந்து வாசகர்களுககு கையெழுத்து இட்டார்.
மறுநாள் இந்து பதிப்பகத்தில் இவரது ‘தேரிக்காட்டு ஜமீன்தார்கள்’ வரலாறு நூலுக்காக அந்த ஸ்டாலில் அமர்ந்து கையெழுத்திட்டார். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் வரலாறு நூலில் உள்ள சாத்தான்குளம் ஜமீன்தார் வரலாற்றில் அன்றைய கால ஆணவக்கொலையை திரைப்படமாக்க சில இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

எதிர்காலத்தில் நெல்லை தூத்துக்குடி மாவட்ட வரலாறுகளை ஒன்று விடாமல் முழுமையாக தொகுக்க வேண்டும் என்பதே இவரது ஆசை.

தற்போது எழுதிய நூல்கள் - 65
தொகுத்த மலர்கள் - 30
நாடகங்கள் - 45
தொடர்கள் - 45
வாங்கிய விருதுகள் - 37
நடித்த திரைப்படங்கள் - 3
இதுவரை இவர் எழுதிய படைப்புகள் 3,500

இலக்கியப் படைப்பு வெளிவருதல்

தமிழில் இலக்கிய நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும் என விரும்பினார். தனது எழுத்தார்வத்தின் காரணமாக பல இலக்கியங்களை படைத்துள்ளார். அதில் உள்ள நாவல்கள் விவரம் வருமாறு.

“கண்ணாடி மாப்பிள்ளை”
“என்னுயிரே விட்டுக் கொடு”
“கொன்றால் தான் விடியும்”
“முத்துகிளி”
மற்றும் பல....

வரலாற்று நிகழ்வுகள்

ஆதிச்சநல்லூரில் உள்ள தொல்பொருள் ஆய்வில் பங்கு கொண்டவர். மேலும் தாமிரபரணி நதியின் முழுமையான வரலாற்றை தொகுக்கும் பொருட்டு தாமிரபரணி பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்.தலைத் தாமிரபரணியை தொடர்ந்து கடை, இடை, தாமிரபரணி வரலாற்றை தொகுத்து நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பெண்களுக்கு ஆதரவு

பெண்கள் முன்னேற்றத்தில் ஆண்கள் பங்கு கொள்ள வேண்டும். பெண்கள் உரிமைகளுக்கு எதிராக ஆண்கள் நிற்க கூடாது என்ற கருத்தைக் கொண்டவர்.

கலை இலக்கியப்பணி
03.10.1988ல் “குருவை மிஞ்சிய சீடர்” என்ற தலைப்பில் நாடகம் எழுதினார். நெல்லை வானொலியின் இளைய பாரதம் நிகழ்ச்சிக்காக அதிகம் எழுத ஆரம்பித்தார். தான் எழுதிய நாடகத்தில் கதாநாயகன் பாத்திரத்தை ஏற்று நடித்தார். ஆறாம்பண்ணை கிராமத்தில், 1991ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘மாமனின் காதலி’ என்ற நாடகம் அரங்கேறியது.
இந்த நாடகத்தில் நடிப்பதற்கு தயார் செய்து வைத்த கதாநாயகன் வராததால் அந்த பாத்திரத்தை இவரே ஏற்று நடித்தார். ஜோடியாக நடித்த பெண் இவரை பாராட்டினார். நெல்லை தினகரன் நாளிதழில் பகுதி நேர நிருபராகவும், பேருந்து நடத்துனராகவும், வானொலி பேச்சாளராகவும் இவருடைய பணி தொடர்ந்தது.

சமூகச் சிந்தனை

மக்கள் முன்னேற வேண்டும் என்ற சமூக சிந்தனை கொண்ட இவர் பெண்களுக்கு குரல் கொடுப்பதில் எப்போதும் முன்நிற்பார்.

பிச்சை எடுத்தல்

பிச்சை எடுப்பதால் மக்கள் சோம்பேறிகளாக அலைகிறார்கள் என்பதை உறுதிபடக் கூறுகிறார். ஏனென்றால் மக்களுக்கு இவர்களால் பெரும் இடையூறு ஏற்படுவதாக சாடுகிறார். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நமது நாட்டை பிச்சைக்கார நாடு என்று எண்ணி விடக் கூடாது என்பதற்காக இத்தகைய கருத்தைக் கொண்டுள்ளார். இவர் எழுதிய “கொன்றால் தான் விடியும்” என்ற நாவலில், “இந்திய நலம் விரும்பி” என்பவர் பிச்சைக்காரர்களை கொல்வதன் மூலம் இந்த கருத்தை காண முடிகிறது.

இலஞ்சத்தை ஒழித்தல்

இலஞ்சம் வாங்குபவர்கள் நாட்டில் இருக்க கூடாது. அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார். இந்த கருத்தை “கொன்றால் தான் விடியும்” நாவலில் இலஞ்சம் வாங்கும் சட்டமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுப்பதன் மூலம் அறியலாம்.

விபசாரத்தை ஒழித்தல்

நாட்டில் உள்ள பெரும் பிரச்சனைகளில் ஒன்றாக இன்று பாலியல் தொழில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த தொழிலில் ஈடுபடும் பெண்களை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார். “கொன்றால் தான் விடியும்” நாவலில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை பொது இடத்தில் கொல்வதன் மூலம் இவரது கருத்தை அறிய முடிகிறது.

கல்வி

தன்னிடம் வரும் விவரம் அறியா பெற்றோருக்கு, கல்வியின் மகத்துவத்தை எடுத்துக் கூறி, அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வியளிக்கத் தூண்டுவார்.

இவர் எழுதிய நூல்கள் விவரம் வருமாறு

1. வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் - சைவ சித்தாந்த நூல் பதிப்புக்கழகம் (நூலகம் ஆணை)
2. கரிசல் காட்டு கதைகள் (ஒரு சிறுகதை மட்டும்), புத்தகப் பூங்கா
3. கொன்றால் தான் விடியும் (நாவல்), காவ்யா பதிப்பகம்
4. பொருநை பூக்கள், காவ்யா பதிப்பகம்
5. பொதிகை மலை அற்புதங்கள், காவ்யா பதிப்பகம் (நூலகம் ஆணை- 2வது பதிப்பு )
6. தாமிரபரணி கரையினிலே, விகடன் பிரசுரம் (இரண்டாவது பதிப்பு)
7. தலைத்தாமிரபரணி (950 பக்கம்), காவ்யா பதிப்பகம், (நூலகம் ஆணை- இரண்டாவது பதிப்பு)
8. என் உயிரே விட்டுக்கொடு ( நாவல்), காவ்யா பதிப்பகம்
9. தாமிரபரணி கரையில் சித்தர்கள், சைவ சித்தாந்தநூல் பதிப்புக்கழகம் (இரண்டாவது பதிப்பு) 10 வருடம் கழித்து மீண்டும் மறுபதிவு
10. என் கிராமத்தின் கதை, பொன்சொர்ணா பதிப்பகம்
11. நம்ம ஊரு அதிசயங்கள், பொன் சொர்ணா பதிப்பகம் (மூவாயிரம் நூல்)
12. ஆதிச்சநல்லூர் ஆய்வுகள், காவ்யா பதிப்பகம்
13. நெல்லை வைணவ தலங்கள், காவ்யா பதிப்பகம்
14. நெல்லை சைவக் கோயில்கள், காவ்யா பதிப்பகம்
15. சீவலப்பேரி சுடலை, காவ்யா பதிப்பகம் (நூலகம் ஆணை & இரண்டாவது பதிப்பு)
16. நெல்லை பெண் தெய்வங்கள் (ஒரு கட்டுரை மட்டும்) காவ்யா பதிப்பகம்
17. பனி மலையும் அபூர்வ கண்டமும் காவ்யா
18. நெல்லை துறைமுகங்கள், காவ்யா பதிப்பகம்
19. கண்ணாடி மாப்பிள்ளை (சிறுகதைதொகுதி) காவ்யா
20. பாலை வனத்தில் ஒரு பசும் சோலை பொன் சொர்ணா பதிப்பகம்
21. தெற்குகள்ளிக்குளம் பனிமயமாதா பொன் சொர்ணா பதிப்பகம்
22. ஸ்ரீகுணவதியம்மன் அற்புதங்கள் பொன் சொர்ணா பதிப்பகம்
23. இருவப்ப புரம் பெரும்படை சாஸ்தா வரலாறு பொன் சொர்ணா பதிப்பகம்
24. தரணிபோற்றும் பரணி நதி பொன்சொர்ணா
25. சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை விகடன் (நூலகம் ஆணை, ஏழாவது பதிப்பு)
(10 ஆயிரம் பிரதி)
26. தென்பாண்டிச்சீமையிலே பாகம் -1 காவ்யா பதிப்பகம்
27. தென்பாண்டிச்சீமையிலே பாகம் -2 காவ்யா பதிப்பகம்
28. நெல்லை ஜமீன்கள், விகடன் பிரசுரம் (நான்காவது பதிப்பு) ( 6 ஆயிரம் பிரதி)
29. நெல்லை நாட்டுப்புறக் கலைஞர்கள் காவ்யா பதிப்பகம்
30. ஸ்ரீகுணவதியம்மன் வரலாறு (தமிழ் - ஆங்கிலம்) பொன் சொர்ணா பதிப்பகம்
31. அருட்தந்தை லூர்து ராஜா அடிகளார் பொன் சொர்ணா பதிப்பகம்
32. குலசேகர நத்தம் கரும்புளி சாஸ்தா வரலாறு பொன் சொர்ணா பதிப்பகம்
33. செய்துங்கநல்லூர் சுந்தர பாண்டிய சாஸ்தா பொன் சொர்ணா பதிப்பகம்(2000 காப்பி)
34. தென் பாண்டிச் சீமை&சில சமுதாயகுறிப்புகள் காவ்யா பதிப்பகம் (நூலகம் ஆணை)
35. அத்ரி மலை யாத்திரை, சூரியன் பதிப்பகம் (மூன்றாவது பதிப்பு)
36. முத்தாலங்குறிச்சி காமராசுவின் நாடகங்கள் (தொகுப்பாசிரியர் பே. சுடலைமணிச் செல்வன்) காவ்யா
37. தோரணமலை யாத்திரை பொன் சொர்ணா பதிப்பகம்( இரண்டாவது பதிப்பு)
38. எனது பயணங்கள் காவ்யா பதிப்பகம்
39. நெல்லை வரலாற்று சுவடுகள் 209 காவ்யா பதிப்பகம் நூலக ஆணை - இரண்டாவது பதிப்பு
40. குளத்தூர் ஜமீன் கதை காவ்யா பதிப்பகம்
41. சேத்தூர் ஜமீன் கதை காவ்யா பதிப்பகம்
42. நெல்லைக்கோயில்கள் காவ்யா பதிப்பகம்
43. சிங்கம்பட்டி ஜமீன் கதை & காவ்யா பதிப்பகம்
44. ஜமீன் கோயில்கள் & சூரியன் பதிப்பகம்
45 படைப்புலகில் முத்தாலங்குறிச்சி காமராசு பொன் சொர்ணா பதிப்பகம்
46 முடிச்சு மேலே முடிச்சு (நாடகம்) பொன்சொர்ணா பதிப்பகம்
47 நெல்லைக்கோயில்கள் பாகம் 2 காவ்யா பதிப்பகம்
48. நவீன தாமிரபரணி மகாத்மியம் ( உலக நதிகள் வரலாற்றில் முதல் வீடியோ டிஜிட்டல் நூல்) பொன்சொர்ணா( 2000 காப்பி)
49. தேரிக்காட்டு ஜமீன்தார்கள் ( தி தமிழ் திசை இந்து) இரண்டாவது பதிப்பு
50. அருள்தரும் அதிசய சித்தர்கள் (தினத்தந்தி)
(இரண்டாவது பதிப்பு)
51. தென்னாட்டு ஜமீன்கள்(காவ்யா பதிப்பகம்)
52. வளங்களை அள்ளித்தரும் வல்லநாட்டு சித்தர் - தினமலர் தாமரை மீடியா பிரதர்ஸ் பதிப்பகம் - விலை 260
53. தவழ்ந்து வரும் தாமிரபரணி -பொன்சொர்ணா பதிப்பகம் - விலை 500
54. கரிசல்காட்டு ஜமீன்தார்கள் - காவ்யா பதிப்பகம் விலை 350
55. பொருநை ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும் அருங்காட்சியகங்களும் - பொன்சொர்ணா பதிப்பகம் விலை 375
56.களரி அடிமுறை - 1 உலக களரி அடிமுறை கூட்டமைப்பு (அமெரிக்கா) விலை 299
57. மரம் நடும் மாமனிதர் - பொன்சொர்ணா விலை 200
58. சக்தி நாதன் எனும் சகாப்தம் - பொன்சொர்ணா பதிப்பகம் விலை 200

59. பூவே புனிதா - பொன்சொர்ணா பதிப்பகம் விலை 150

60. தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் - தூத்துக்குடி மாவட்ட நிர்வாக வெளியீடு விலை 500
61. தூத்துக்குடி மாவட்ட வரலாறு - பொன்சொர்ணா பதிப்பகம் விலை 250
62. தூத்துக்குடி மாவட்ட வரலாறு ( ஆங்கிலம்) - பொன்சொர்ணா பதிப்பகம் விலை 150
63. நெல்லை கோயில்கள் - காவ்யா - ரூ 1000
64. அருள் தரும் அபூர்வ ஆலயங்கள் 2000 - பொன்சொர்ணா ரூ 1000
65. பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் 1 தாமரை பிரதர்ஸ் மீடியா
66. பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் 2 தாமரை பிரதர்ஸ் மீடியா

பதிப்பில் உள்ள நூல்கள்

1. சருகு
2. தீ நுண்மி
3. பொருநை
4. சாத்தன்
5. இடைத்தாமிரபரணி
6. களரி அடிமுறை பாகம் 2 ( நிறுவனரின் தாயகப்பயணம்)
7. களரி அடிமுறை பாகம் 3( 18 ஆம் நூற்றாண்டு ஆசான்கள்)
8. கள்ளிக்காட்டு கள்ளவாண்டன்
9. மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி
10. ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகள்
11. பரணி நதி புனிதர்கள்
12. நம்பி மலை யாத்திரை
13. சிறு தெய்வ வழிபாடுகள்
14. மலைக்கோயில் தரிசனங்கள்
15. முத்துகிளி

உருவாக்கிய நகர் மலர்கள்

1. 7.06.1999 செய்துங்கநல்லூர் சிறப்பு மலர், தமிழ்முரசு
2. 11.10.1999 கருங்குளம் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி மலர், தினகரன்
3. 12.10.1999 கருங்குளம் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சி மலர், தினகரன்
4. 27.10.1999 வல்லநாடு சிறப்பு மலர், தமிழ்முரசு
5. 10.01.2000 முறப்பநாடு மலர், தமிழ்முரசு
6. 26.02.2000 கருங்குளம் நகர சிறப்பு மலர், தமிழ்முரசு
7. 15.10.2001 முத்தாலங்குறிச்சி சிறப்பு மலர், தமிழ்முரசு
8. 4.10.2001 செய்துங்கநல்லூர் நகர சிறப்பு மலர் தமிழ்முரசு
9. 27.11.2002 தூத்துக்குடி மாவட்ட ஆலய மலர் நூல் தமிழ்முரசு
10. 28.10.2002 நெல்லை மாவட்ட ஆலய மலர் நூல் தமிழ் முரசு
11. 17.01.2003 செய்துங்கநல்லூர் சிறப்பு மலர்-2 தமிழ் முரசு
12. 12.03.2003 அம்பை நகர சிறப்பு மலர், தமிழ் முரசு
13. 14.03.2003 முதல்வர் ஜெயலலிதா கால்வாய் கிராமம் வருகை சிறப்பு மலர், தமிழ்முரசு
14. 9.12.2003 சேரகுளம் -இராமனுஜம்புதூர் சிறப்பு மலர், தமிழ் முரசு
15. 16.10.2004 கருங்குளம் கருட சேவை, தமிழ் முரசு
16. 7.01.2005 தமிழ் முரசு பொங்கல் மலர்
17. 28.02.2005 செய்துங்கநல்லூர் நகர மலர் -3 தமிழ் முரசு
18. 24.06.2005 சோம சுந்தர விநாயகர் கோயில் கும்பாபிஷேக மலர்
19. 22.06.2005 முதல்வர் ஜெயலலிதா நெல்லை வருகை சிறப்பு மலர், மக்கள் குரல்
20. 24.11.2005 தீபாவளி மலர், தமிழ்முரசு
21. 5.08.2011 கள்ளிகுளம் பனி மலர் 2011
22. 31.07 உலகத்தமிழர் மாநாடு மலர் - நாகர்கோயில்
23. 25.12.2004 கிறிஸ்துமஸ் மலர், தினகரன்
24. 10.03.2004 வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் வரலாறு, தமிழ்முரசு
25. 13.01.2012 பொங்கல் மலர், தமிழ்முரசு
26. சதயவிழா 2010 இராசராசசோழ தேவேந்திரன் 1025ஆம் ஆண்டு விழா மலரில் காமராசு கட்டுரை
27. இந்திர விழா 2011 மலரில் கட்டுரை
28. செய்துங்கநல்லூர் கிளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மலர் (உருவாக்க குழுத் தலைவர்)
29. ச.வே.சு அவர்களின் சிறப்பு மலர் கட்டுரை
வானொலி மற்றும் மேடை நாடகங்கள்
1. 14.10.1995 முடிச்சுமேலே முடிச்சு மேடைநாடகம், வெட்டிகுளம்
2. 11.12.1996 கலங்க வேண்டாம் (A.I.R)
3. 23.05.1996 வடதுருவம் தென் துருவம் (A.I.R)
4. 15.11.1994 நம்ம பஞ்சாயத்து
5. 29.04.1997 பாதை தெரியுது
6. 16.01.1998 கண்மணியின் காதலன், வல்லகுளம்
7. 17.09.1998 கட்டபொம்மனும் கவிராயரும் ஆல் இந்திய ரேடியோ (இந்த நாடகம் 5 தடவை மறு ஒலிப்பு செய்யப்பட்டுள்ளது. 31.10.2003, 30.11.2001, 8.01.2002, 3.10.2002, 29.05.2002)
8. 30.09.2001 தங்கையின் வாழ்வு மல்லல் புதுக்குளம், மேடை நாடகம்
9. 12.06.2002 தெரு முனை நாடகம் உதவி தொடக்க கல்வி அலுவலகம் (கொங்கந்தான்பாறை, தருவை)
10. 4.09.2002பெண்ணின் பெருமை மல்லல் புதுக்குளம்
11. 12.12.2003 சட்டாம் பிள்ளை பேரன் ஆல் இந்திய ரேடியோ (மறு ஒலிபரப்பு 23.04.2004)
12. 06.09.2006எங்க வீட்டு மருமகள் மல்லல் புதுக்குளம்
13. 27.06.2006 என்று தணியும் இந்த தாகம் (A.I.R)
( செம்மொழி மாநாடு&கோவை தமிழ்நாடு முழுவதும்)
14. 14.01.2009 ரோபா மருமகள் மாவடிபண்ணை
15.நவம்பர் 2009 ரோபா மருமகள் சாத்தான்குளம்
16. அக்டோபர்2008 ரோபா மருமகள் வேப்பங்காடு
21. 15.08 நாடகம், பண்டாரபுரம்
22.25.05.1992 கண்டிஷன் கண்டிஷன்
ஆல் இந்தியா ரேடியோ
23. 03.08.1990 மேடை நாடகம், ஆறாம்பண்ணை
24. 07.01.1991 மாமனின் காதலி ஆறாம்பண்ணை
25. 14.05.1992 அண்ணி என் தெய்வம், வல்லக்குளம்
26. 14.10.1992 தங்கையின் வாழ்வு, புதுக்குளம்
27. 27.07.1992 உயிர் தியாகம், அரசர்குளம்
28. 10.05.1992 கண்டிஷன் கண்டிஷன், நேயர் மன்றம்
29. 6.02.1991 மாமனின் காதலி, வல்லக்குளம்
30. 16.01.1993 தொழிலை மதிப்போம்,(A.I.R)
31. 2.04.1991 கண்டிஷன் கண்டிஷன், (A.I.R)
32. நீதியின் நிழல் (கதாநாயகி) முத்தாலங்குறிச்சி
33. மனிதரில் மாணிக்கம் (கதாநாயகி) முத்தாலங்குறிச்சி
34. 5.02.1995 நிறம் மாறும் உறவுகள், (A.I.R)
35. 3.02.1995 மீனுவுக்கு கண் தொறந்தாச்சு, (A.I.R)
36. 25.03.1995 மீனுவுக்கு கண் தொறந்தாச்சு,
எம்.எம்.ஸ்கூல், செய்துங்கநல்லூர்.
37. 25.03.1995 ஆட்டோவில் வந்த வரன், (A.I.R)
38. 3.08.1995 திருந்திய பின் வந்த விளைவு,(A.I.R)
39. 6.09.2006 எங்கள் வீட்டு மருமகள், புதுக்குளம்
40. 17.03.1906 முடிச்சு மேலே முடிச்சு,
ஆல்இந்திய ரேடியோ மறு ஒலிபரப்பு - 14.01.2006)
41. கஞ்ச மாமா, தாதன்குளம்
42. கஞ்சமாமா, ஆல் இந்திய ரேடியோ
43. மனம் சொல்லும் மௌனம்,(A.I.R) (நாடகவிழா)
44. முடிச்சு மேலே முடிச்சு மேடை நாடகம்
கிளாக்குளம் 13.08.2017
45. 07.06.2019 உயிர் மூச்சி வானொலி விழா நாடகம்

பல்வேறு ஊடகங்களில் வெளி வந்த தொடர்கள்

1. 5.5.11 நெல்லை மண்பேசும் சரித்திரம் 75 வாரம்
- வசந்த் டிவி
2. 3.2011 நடராஜரின் பஞ்ச தலங்கள் 5 மாதம்
- ஆன்மிக பலன்
3. ஏப் 2010 நவதிருப்பதி 9 மாதம் ஆன்மிகபலன்
- தினகரன்
4. 15&18.10.2010 நவதிருப்பதி ஆலய தரிசனம்
- வசந்த் டிவி
5. 30&31.10.2010 பொதிகை மலை புலன் விசாரணை
- வசந்த் டிவி
6. 7&8.08.2010 சங்குமுகம் புலன் விசாரணை - வசந்த்
7. 4.09.2009 தாமிரபரணி கரையினிலே 13 வாரம்
- சக்தி விகடன்
8. ஜீலை 2009 நவகைலாயம் 9 மாதம்
- ஆன்மிகபலன்
9. 18.07.2009 சொரிமுத்து அய்யனார் 6 நாள்
- கரண் டிவி
10. 29.07.2007 அரியநாயகிபுரம் 3 வாரம் வீரகேசரி,
இலங்கை
11. 6.05.2007 முக்கூடல் முத்துமாலை அம்மன் 2 வாரம்
வீரகேசரி, இலங்கை
12. 15.07.2007 தாமிரபரணியில் இராமயண நிகழ்வு
வீரகேசரி, இலங்கை
13. 14.01.2007 நெல்லை பேஜஸ் தொடர் இன்டர்நெட்
14. 20.03.2005 தாமிரபரணி கரையினிலே
தொடர் தினகரன் நெட்
15. 25.05.2005 நதிக்கரையோரத்து அற்புதங்கள் தொடர்
- தமிழ் முரசு (இரண்டாம் பாகம்)
16. 31.05.2004 அதிசயம் நிகழும் அண்டார்டிகா 12 வாரம்
தமிழ் முரசு
17. 27.08.2008 நதிக்கரையோரத்து அற்புதங்கள் தொடர்
மும்பை தமிழ் டைம்ஸ் 229 வாரம்
18. 3.08.2003 எப்.எம் அறிவிப்பாளர் 11 நாள் - தினகரன்
19. 25.07.2003 எப்.எம் அறிவிப்பாளர் - தமிழ் முரசு
20. 30.06.2003 குறுக்குத்துறை அற்புதங்கள் - தமிழ் முரசு
21. 23.06.2003 பொதிகை மலை அற்புதங்கள் 7 நாள்
-தமிழ் முரசு
22. 16.03.2003 நதிக்கரையோரத்து அற்புதங்கள் 180 வாரம்
தமிழ் முரசு (முதல் பாகம்)
23. 27.05.2001 கொன்றால் தான் விடியும் 30 வாரம்
- தமிழ் முரசு
24. முத்தாலங்குறிச்சி 2 நாள் புலன்விசாரணை
- வசந்த்டிவி
25. அத்ரி மலை 2 நாள் புலன் விசாரணை
- வசந்த் டிவி.
26. 10.05.2012 பொதிகை மலையாத்திரை 2 நாள்
நம்பினால் நம்புங்கள் - ஜீ தமிழ் டிவி
27. முத்தாலங்குறிச்சியை ஆட்டி வைக்கும் ஆவிகள் நிஜம்
- சன் டிவி (ஏற்பாடு மட்டும்)
28. வணக்கம் நெல்லை மாத இதழ்
“ வியக்க வைக்கும் நெல்லை சீமை”
29. சித்தர்கள் வரலாறு - சித்தன் முரசு
30. அத்ரி மலை யாத்திரை
- தினகரன் ஆன்மிக மலர் 50 வாரம்
31. மலை நாட்டு திருப்பதி புகைப்பட கலைஞராக
- தினகரன்
32. நம்ம ஊரு தெய்வம், தினகரன் ஆன்மிக மலர்
( புகைப்பட கலைஞர்)
32. மறைந்த ஜமீன்களும் மறையாத நினைவுகளும்
- வணக்கம் மும்பை
33. எனது மலை பயணம் - சான்றோர் மலர்
33. பூவே புனிதா - நாடான் குரலோசை
34. நதி வெளி பயணம்- பயணி மாத இதழ்
35. பிரபலங்களின் நேர்முகம் காவ்யா காலாண்டு இதழ்
36. ஜமீன் கோயில்கள் ஆன்மிக பலன்
37. அதிசய சித்தர்கள் - தினத்தந்தி
38. சிறுதெய்வ வழிபாடு - இராஜகோபுரம்
39. நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2
- வணக்கம் மும்பை.
40. முத்துக்கிளி - சான்றோர் மலர்
41. மரம்நடும் மாமனிதர் வணக்கம் மும்பை
42. அத்ரி மலை யாத்திரை - சக்தி விகடன்

வாங்கிய விருதுகள்

1. 2003 “சமூக சேவகர் விருது” பாரதி கலை இலக்கிய மன்றம் ஸ்ரீவைகுண்டம்.
2. 2003 “சமூக சேவகர் விருது”, சிவாஜி மன்றம் ஸ்ரீவைகுண்டம்
3. 2004 “பொருநை புதல்வன்” பட்டம், மும்பை தமிழர் பேரவை& மகராஷ்ரா மாநிலம்.
4. 9.01.2005 “தமிழ் மாமணி விருது” மாருதி வழிபாட்டு கழகம், கன்னியாகுமரி மாவட்டம்.
5. 13.11.2005 “நதிக்கரையோரத்து நாயகன் விருது” சரத் மன்றம், செய்துங்கநல்லூர்
6. 22.12.2010 “தமிழ்க்கலைசெல்வர்விருது” திருவாவடுதுறை ஆதினம்
7. 01.01.2011 “சிறந்த எழுத்தாளர் விருது” பாரதி கலை இலக்கிய மன்றம்
8. 29.01.2012 “எஸ்.டி. ஆதித்தனார் விருது” தாமிரபரணி & நெல்லை
9. 29.02.2012 “நாட்டுப்புறவியல் மேதை” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கம்,
செய்துங்கநல்லூர்
10. “பொருநை செல்வர்” பட்டம் வழங்கியவர் குறிஞ்சி செல்வர் எழுத்தாளர் கோதண்டம்.
11. 27.05.2012 “பதிவுச்செம்மல்” பொதிகைக் கவிஞர் மன்றம், நெல்லை
12. தென்பாண்டிச்சீமையிலே பாகம் 1 என்ற நூல் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த திருக்கோவில்கள்
வளர்த்த தெய்வத்தமிழ் அனைத்துலக 11ஆவது ஆய்வு மாநாட்டில் சிறந்த படைப்பாசிரியர் விருது மற்றும் 5
ஆயிரத்திற்கான பொற்கிழியை பெற்றது. மேலும் “செந்தமிழ் வேந்தர்” என்ற பட்டத்தையும் பெற்றது. நாள்:
20.07.2013.
13. 27.04.2014 “அண்ணா விருது” காந்திமதியம்மாள் அறக்கட்டளை, சென்னை மயிலாப்பூர் சண்முகநாதன்
அரங்கம்.இது போன்ற பல விருதுகள் பெற்றுள்ளார்.
14. சிறந்த சமூக நல சிந்தையாளர் 10.12.2017 இடம் - லயன்ஸ் கிளப் திருநெல்வேலி & கிரின் சிட்டி
15. அழகர் பப்ளிக் பள்ளி விருது இடம் தூத்துக்குடி 20.12.2018
16. தன்பொருநை கலைச்செல்வர் - காஞ்சிமடம், காஞ்சிபுரம்.
17.ஆதிச்சநல்லூர் நாயகன் பத்திரிக்கையாளர் சங்கம் - நாசரேத்
18. அகழாய்வு நாயகன் நூலகம் செய்துங்கநல்லூர்.
19. சிறந்த எழுத்தாளர்- நாரதர் பிறந்தநாள்- பாளை
20. சிறந்த நாவலாசிரியர் - தேனி நட்டாத்தி நாடார்சங்கம்
21. சேவை விருது - தோரண மலை- கடையம்
22. நீயூஸ் 7 தமிழ்ரத்னா சிறப்பு விருது 2019. வழங்கியவர் தமிழக முதல்வர் டாக்டர் எடப்பாடி திரு பழனிசாமி.
நாள் 22.10.2019. சென்னை கலைவாணர் அரங்கம்.
23. தாமிரபரணி திருநெல்வேலி தைபூசபடித்துறை புஷ்கரணி கமிட்டி சார்பில் இலக்கிய கலை செம்மல் விருது
வழங்கப்பட்டது. வழங்கியவர் காஞ்சி பீடாதிபதி, வேளாக்குறிச்சி, செங்கோல் மடம் உள்பட பல ஆதினங்கள்
முன்னிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜி வழங்கினார். நாள் 03.11.2019
24. 2019 சிறந்த சேவா ரத்னா விருது மேலப்பாளையம் உங்கள் நண்பர் பத்திரிக்கை சார்பில் அதன் ஆசிரியர்
நெல்லை ஜாபர் வழங்கினார்.
25. எழுத்தாளர் பொ.ம. கோதண்டம் அவர்கள் சார்பில் எழுத்துச் சித்தர் என்ற விருது வழங்கப்பட்டது.

26. தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது&2020 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கியவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

27. கவிமணி விருது தொல்லியல் அறிஞர் விருது 2021 அன்பு வனம் தமிழ்நாடு பேச்சாளர் சங்கம் நாஞ்சில் கலையகம் இணைந்து வழங்கியது. வழங்கியவர் மகா சன்னிதானம்

பாலபிரஜாபதி அடிகளார் 27.07.2021

28. மதுரை பாரதி யுவகேந்திரா பாரதி புரஸ்கார் 2021 பாரதி நூற்றாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு

29.11.09.202129. வாக்காளர் விழிப்புணர்வு குறும் படம் எழுத்தாளருக்காக பாராட்டு சான்றிதழ். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில்ராஜ். நாள் 26.01.2022
30.செந்தமிழ்ச் செல்வர் விருது மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பொற்கிழி, வேளாக்குறிச்சி ஆதினம் 18 வது குருமகாசன்னிதானம் மணி விழா - திருப்புகழூர்,நாகபட்டினம். 31.01.2022
31. அறியப்படாத சுதந்திர போராடட வீரர்கள் பற்றி ஆவணப்படம் தயாரிப்பு பாராட்டு சான்றிதழ். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு. செந்தில்ராஜ். 30.03.2022
32. சொற்சுவை தேனீ விருது - தேனீ தமிழ்சங்கம் மற்றும் திருச்சி ஆதித்தனார் ஆய்வு மையம்- நாள் 09.07.2022
33. திருநெல்வேலி ரோட்டரி கிளப் 80 வது தலைவர் பதவி ஏற்பை முன்னிட்டு முதல் பேச்சாளர் விருது நாள் 11.07.2022
34. பொருனை தமிழ்க் காவலர் விருது வழங்கியவர் செந்தமிழர் சீமான் - ஏற்பாடு வியனரசு நாள் 24.07.2022
35. திருப்பூர் கொடி காத்த குமரன் விருது -75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மறைக்கப்பட்ட சுதந்திரப்போராட்ட வீரர்களுடைய பேரில் பல் துறை சாதனையாளர்களுக்கான சுதந்திர தின சிறப்பு விருது வழங்கியோர் - தமிழ் செம்மொழி புலனாய்வு மன்றம் - மத்திய அரசு பதிவு பெற்ற தமிழ் அமைப்பு 15/08/2022
36.தாமிரபரணி நதி பற்றிய விரிவான ஆராய்ச்சியாளர் சேவைக்கான விருது - தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் நிலச்சுவான்தார்கள் விவசாயிகள் அபிவிருத்தி சங்கம்- வழங்கியோர் திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. சமூக நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கீதாஜீவன்ஆகியோர். அவர்களுடன் மீனவர் மற்றும் கால்நடை துறை அமைச்சர் மாண்புமிகு அனிதா ராதாகிருஷ்ணன். ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த ராஜ் இருந்தனர். 20.08.2022
37.தமிழ்நாடு உழைக்கும் பத்திரிக்கையாளர் விருது - குற்றாலம் புலியருவி அருகில் உள்ள கே. ஆர்.டைகர் ரிச்சார்ட்ஸ் ல் நிகழ்ச்சி -இந்திய உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவரும் டெல்லி பாராளுமன்ற செய்தியாளருமான விக்ரம் ராவ் தலைமை – 27.10.2018
38.04.09.2022 - வ.உ.சி இலக்கிய வானம் வ.உ.சி. போற்றும் அறிஞர் விருது இடம் - ஓட்டப்பிடாரம்

முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நூல்கள் பற்றிய குறிப்புகள்

1.வல்லநாடு சித்தர் சாது சிதம்பரசுவாமிகள் - சைவ சிந்தாந்த நூல் பதிப்பு கழகம்தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள பாறைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள். இவர் வள்ளலாரின் வழித்தோன்றல். மிருகங்களை தன் கட்டுக்குள் வைத்திருப்பவர். தனது உடலை எட்டு துண்டாக பிரித்து நவகண்டயோகம் செய்யகூடியவர். அவரை பற்றிய அபூர்வ தகவல் மற்றும் படங்கள் அடங்கியது. அரசு நூலக ஆணையை பெற்றது.
விலை 50 ரூபாய்

2.பொதிகை மலை அற்புதங்கள் - காவ்யா பதிப்பகம்
பொதிகை மலையில் உள்ள பாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்தியர் அருவி உள்பட இந்த மலையில் நடந்த சில அற்புத தொகுப்புகள். தமிழ்முரசில் தொடராக வந்த ஆச்சர்யமூட்டும் தகவல்களும் இதில் உண்டு. அரசு நூலக ஆணையை பெற்றது.
விலை 65 ரூபாய்

3.பொருநை பூக்கள்- காவ்யா பதிப்பகம்
தாமிரபரணி கரையில் பொதிகை மலை முதல் அம்பாசமுத்திரம் வரை உள்ள அபூர்வ தகவல்கள் அடங்கிய நூல். மாதவ சிவஞான முனிவர் உள்பட பொதிகை அடிவாரத்தில் வாழ்ந்த அபூர்வ மகான்களின் வரலாறு அடங்கிய தொகுப்பு.
விலை 65 ரூபாய்

4. கொன்றால் தான் விடியும் - காவ்யா பதிப்பகம்
தமிழ்முரசில் வெளிவந்த நாவல். நாட்டில் பிச்சைக்காரர்கள், விபச்சாரிகள், லஞ்சம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் மூலமாக இந்தியா வல்லரசாவது தடைபடுகிறது. இதை எப்படி முறியடிக்கிறார் நமது கதாநாயகன் என்பதை திகில் கலந்த கொலையுடன் விவரிக்கும் விறுவிறுப்பான நாவல்.
விலை 65 ரூபாய்

5. தாமிரபரணி கரையினிலே - விகடன்
தாமிரபரணி தோன்றும் இடத்தில் இருந்து அடையகருங்குளம் வரையில் உள்ள சுவடுகளின் தொகுப்பு, தாமிரபரணி கரைக்கும் இராமாயணத்துக்கும் உள்ள தொடர்பு, நவகைலாய தலங்களைப் பற்றிய தகவல்களும் இதில் உள்ளன.
விலை 70 ரூபாய்

6. தலைத்தாமிரபரணி - காவ்யா பதிப்பகம்
தாமிரபரணி வரலாற்றில் முதல் பெரிய எளிய தமிழ் நூல். 951 பக்கங்களை கொண்டது. நெல்லை தமிழ் முரசு, மும்பை தமிழ் டைம்ஸ், தினகரன் நெட் ஆகிய மூன்று ஊடகங்களில் ஒரே நேரத்தில் வெளிவந்த மெகா தொடர். மேதகு முன்னாள் இந்திய ஜனாதிபதியின் பாராட்டை பெற்றது. தாமிரபரணியை தலை, இடை, கடை என்று பிரித்து எழுத முயற்சி செய்ததின் வெளிப்பாடே இந்த புத்தகம். இடையும், கடையும் தயாராகி கொண்டிருக்கிறது. அரசு நூலக ஆணையை பெற்றது.
விலை 600 ரூபாய்

7. என் உயிரே விட்டுக்கொடு - காவ்யா பதிப்பகம்
ஆசிரியரின் 21 வயதில் எழுதப்பட்ட இந்த நாவல் அவரது 43 வது வயதில் வெளிவந்தது. மும்முனை காதல் கதை. கிராமங்களில் இந்த நாவலை நாடகமாகவும் அறங்கேற்றியுள்ளனர். இதே நூலில் “கரகம் எடுத்து வந்து” என்ற ஒரு நாவலும் உண்டு. கிராமங்களில் இரட்டை அர்த்தம் பேசி ஆடும் கரகாட்டப் பெண் அதை தவறு என்று கோயில் கொடைவிழாவில் ஆட்டத்தினை நிறுத்தி விட்டு வெளியேறுகிறார். இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனையை ருசிகரமாக கூறியுள்ளார் ஆசிரியர்.
விலை 125 ரூபாய்

8. என் கிராமத்தின் கதை - பொன்சொர்ணா பதிப்பகம்
முத்தாலங்குறிச்சி தாமிரபரணி கரை குக்கிராமம் தான். ஆனால் இங்குள்ள மண்ணுக்கு சிறப்பு. பெண்ணுக்கு சிறப்பு. கோயிலுக்கு சிறப்பு. ஊரை சுற்றி உள்ள கரைகளுக்கு சிறப்பு. இங்குள்ள மண்ணும் பொன்தான். ஆம். இங்கு தயாரிக்கும் செங்கல்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகிறது. மதுரை ஸ்பெஷல் ஜிகர் தண்டா தோன்ற காரணம் இந்த ஊர். எதிர்கரை ஆற்றில் குளிக்கும் போது இஸ்லாமியர் ஒருவருக்கு தோன்றிய யோசனையின் உருவானது. இது போல் பல ருசிகர குறிப்புகள் உண்டு.
விலை 155 ரூபாய்

9. நம்ம ஊரு அதிசயங்கள் - பொன்சொர்ணா பதிப்பகம்
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வித்தியாசமான சில தகவல்கள் அடங்கிய சிறு நூல்.
விலை 25 ரூபாய்

10. ஸ்ரீகுணவதியம்மன் கோயில் வரலாறு - பொன்சொர்ணா பதிப்பகம்
முத்தாலங்குறிச்சி கிராமத்தில் வடக்கு நோக்கி தாமிரபரணி ஆறே வணங்கி செல்லும் கம்பீரமான தெய்வம் குணவதி அம்மன். இந்த அம்மனுக்கு நல்லபிள்ளை பெற்ற குணவதி என்ற பெயரும் உண்டு. எப்படி? என்பதை விளக்கும் நூல்
விலை 75 ரூபாய்

11. தாமிரபரணி கரையில் சித்தர்கள் - சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம்
தாமிரபரணி கரையில் உள்ள சித்தர்கள் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம். தினமணி கலாரசிகன் போன்ற சான்றோர் பெருமக்களின் பாராட்டு பெற்ற நூல். அகத்திய பெருமான் முதல் வல்லநாட்டு சுவாமி, ஏரல் சேர்மன் சுவாமிகள் வரலாறும் அடங்கும். இரண்டாவது பதிப்பு வெளிவந்துள்ளது.
விலை 125 ரூபாய்

12. ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் - காவ்யா பதிப்பகம்
ஆதிச்சநல்லூர் பற்றிய ஆய்வு நூல் சாத்தான்குளம் ராகவன் அவர்கள் எழுதிய பொருநை வெளி நாகரிகம் என்ற நூலுக்கு பிறகு ஆதிச்சநல்லூரை பற்றி வெளி வந்த நூல். இந்த நூலில் 2004 வரை நடந்த ஆராய்ச்சிகளை ஆசிரியர் நேரடியாக பார்த்து விவரித்துள்ளார்.
விலை 255 ரூபாய்

13. சீவலப்பேரி சுடலை - காவ்யா பதிப்பகம்
தாமிரபரணி கரையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம் சீவலப்பேரி சுடலை. இந்த சுவாமியை பற்றி வெளிவந்த முதல் நூல் இது. தமிழக நூலக ஆணை பெற்ற நூல். இரண்டாவது பதிப்பு.
விலை 75 ரூபாய்

14. நெல்லை வைணவ தலங்கள் - காவ்யா பதிப்பகம்
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வைணவ தலங்கள், இந்த தலங்களுக்கு செல்லும் வழித்தடம். தொடர்பு கொள்ள வேண்டிய போன் எண்கள், நவ திருப்பதி உள்பட பல கோயில்களின் தலவரலாறு இந்த நூலில் உள்ளது.
விலை 255 ரூபாய்

15. கண்ணாடி மாப்பிள்ளை - காவ்யா பதிப்பகம்
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி பல ஊடகங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. பல திரைப்படங்களுக்கு கருக்களை கொண்ட கதைகள் இதில் உள்ளன. கிராமங்களின் நிகழ்வுகள் சிறுகதையில் வடிக்கப்பட்டுள்ளது.
விலை 255 ரூபாய்

16. நெல்லை சைவ கோயில்கள் - காவ்யா பதிப்பகம்
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவகைலாயங்கள், நடராஜரின் பஞ்சதலங்கள் உள்பட சைவ கோயில்களின் வரலாறு. செல்லும் வழி. தொடர்பு எண்ணுடன் உள்ளது.
விலை 255 ரூபாய்

17. தெற்கு கள்ளி குளம் பனிமயமாதா - பொன்சொர்ணா பதிப்பகம்
நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள ஊர் தெற்கு கள்ளிகுளம். இங்குள்ள பனிமயமாதா கோயில் மிகவும்சிறப்பானது. மாதா நேரடியாக காட்சிதந்த ஆலயம். இதை நேரடியாக பார்த்தவர் இன்றும் சாட்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த ஆலயத்தின் ஒவ்வொரு முன்னேற்ற வரலாறுகளை நாவலாக தொகுத்துள்ளார் ஆசிரியர் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல வரலாற்றை விரும்பும் அனைத்து வாசகர்களும் படிக்க வேண்டிய நூல்.
விலை 155 ரூபாய்

18.நெல்லை துறைமுகங்கள் - காவ்யா பதிப்பகம்
2500 ஆண்டுகளுக்கு முன்பு கொற்கை துறைமுகம் மன்னார் வளைகுடாவில் இருந்துள்ளது. காயல்பட்டிணம், குலசேகரபட்டிணம், உவரி உள்பட பல துறைமுகங்கள் நமது பகுதியில் இருந்துள்ளது. அது பற்றிய ஆய்வுடன் முத்துகுழித்துறை 7 ன் வரலாறு... தூத்துக்குடியின் பழைய துறைமுகம், புதிய துறைமுகம் என 2,500 வருட வரலாற்றை இந்த நூலில் 336 பக்கத்தில் ஆசிரியர் தொகுத்து படத்துடன் வழங்கியுள்ளார்.
விலை 255 ரூபாய்

19. இருவப்பபுரம் ஸ்ரீ பெரும்படை சாஸ்தா வரலாறு பொன்சொர்ணா பதிப்பகம்
சோழர்கள் ஆட்சிகாலத்தல் உருவான கோயில் என்ற வரலாறுடன் துவங்கி, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தர்ஹா, கொற்கை துறைமுகம், ஆத்தூர், ஆறுமுகமங்கலம், நட்டாத்தி கோயில் என கோயில் வரலாறுகளை எடுத்து சொல்லும் நூல் இருவப்பபுரத்தில் உள்ள பெரும்படை சாஸ்தா வரலாற்றை படிப்படியாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.
விலை 125 ரூபாய்

20. பாலைவனத்தில் ஒரு பசும்சோலை - பொன்சொர்ணா பதிப்பகம்
தன்னை தூக்கி விட்ட ஏணிகளை நினைத்து பார்க்கும் நூல். ஆரம்பக் கால கட்டத்தில் கிராமத்தில் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த முத்தாலங்குறிச்சி காமராசுவை எழுத்தாளராக தூக்கிவிட்ட அருட்தந்தை ரவிபாலன் அடிகளாரின் 25 வருட துறவு வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் நூல். ரவிபாலன் அடிகாளருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நூல் எழுதப்பட்டது. இது அவரின் 25வது வருட நிறைவு விழாவில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆர்.சி.ஆலயத்தில் வெளியிடப்பட்டது.
விலை 55 ரூபாய்

21. தென்பாண்டிச்சீமையிலே பாகம் -1 - காவ்யா பதிப்பகம்
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வரலாற்றை 1013 பக்கத்தில் தொகுத்துள்ளார். கலைகள், சினிமா, சினிமா தியேட்டர், பாலங்கள் வரலாறு.. ஜமீன்கள் என பல குறிப்புகளை கொண்டது இந்த நூல். காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியுடன் இணைந்து திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் நடத்திய திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் அனைத்துலக 11 ஆவது ஆய்வு மாநாட்டில் உலக அளவில் சிறந்த நூலுக்கு வழங்கப்படும் செந்தமிழ் வேந்தர் விருதையும் ரூ 5 ஆயிரம் ரொக்கப் பரிசையும் பெற்றது இந்த நூல்.
விலை 800 ரூபாய்

22. தென்பாண்டிச்சீமையிலே பாகம் -2 - காவ்யா பதிப்பகம்
நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தமதம், சமணம், கிறிஸ்தவம், சீர்திருத்த கிருஸ்தவம், இஸ்லாம், இந்து மதங்கள் வளர்ந்த விதம், அது சம்பந்தப்பட்ட கோயில் ஆலய அட்டவனை, பல்வேறு பட்ட மதங்களில் வாழ்ந்த மகான்கள் வரலாறு உள்ளிட்ட இதுவரை எந்த நூலிலும் விவரிக்கப்படாத அரிய தகவல்கள் இந்த நூலில் உள்ளது. மாவட்ட ஆட்சி தலைவர் திரு சத்தியமூர்த்தி அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார்கள். 877 பக்கங்களை கொண்ட இந்த நூல் பாளையங்கோட்டையில் 22.06.2013 அன்று நடந்த புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
விலை 800 ரூபாய்

23. சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை - விகடன்
உலகில் முதல் முதலில் தோன்றிய இடம், 2500 வகை அரிய மூலிகைகள் இருக்கும் இடம், தாமிரபரணி தோன்றும் இடம், தமிழ்தோன்றிய இடம், தென்றல் தோன்றிய இடம், அகத்திய குருமுனி வாழும் இடம் என பல சிறப்புகளை கொண்ட பொதிகை மலைக்கு மூன்று வருடங்கள் யாத்திரை சென்ற அனுபவம்தான் இந்த நூல். அட்டைக்கடி, முட்டு ஏத்தம், யானைக்காடு, புலிகள் சரணாலயம், ராஜ நாகம் உள்ளிட்ட கொடிய விஷ ஜந்துகள் வசிக்கும் காட்டுக்குள் பயணம் செய்யும்அனுபவமே மிகவும் த்ரிலிங்கானது. மின்சாரமே இல்லாத காட்டு பங்களாவில் கடுவா போன்ற கொடிய மிருகங்களிடம் இருந்து தப்பிக்க தங்கியிருந்த நாள்கள். காட்டுக்குள் நடந்து சென்ற அனுபம் எல்லாம் சேர்ந்து உருவான இந்த நூல் ஒவ்வொருவர் வீட்டு பூஜை அறையிலும் இருக்க வேண்டிய ஒரு நூல். அரசு நூலக அனுமதி பெற்றது. எடிசன் வெளிவந்துள்ளது. இதுவரை 10 ஆயிரம் பிரதி விற்றுள்ளது. விலை: 190 ரூபாய்

24. நெல்லை ஜமீன்கள் - விகடன் பதிப்பகம் ( 6 ஆயிரம் நூல் 4 வது எடிசன்)
குறைந்த காலத்தில் அதிகமாக விற்பனையான நூல். நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊர்க்காடு, சிங்கம்பட்டி, சிவகிரி, குளத்தூர், ஊத்துமலை, எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, வடகரை (சொக்கப்பட்டி), தலைவன்கோட்டை, நெல்கட்டும்செவல் ஆகிய 10 ஜமீன்தார்களின் வரலாறு இந்த நூலில் உள்ளது. ஜமீன்தார்கள் வாரிசுதாரர்கள் படித்து விட்டு, மேலும், மேலும் தகவல்களை அள்ளித் தந்து கொண்டிருக்கிறார்கள். ஜமீன்கள் வரலாற்றை தனியாக தொகுத்து வெளிவந்த முதல் நூல். முக்கியத்தும் வாய்ந்த இந்த நூலை அனைவரும் படிக்க வேண்டியது அவசியம்.
விலை 190 ரூபாய்

25. நெல்லைநாட்டுப்புற கலைஞர்கள் - காவ்யா
நெல்லை மாவட்டத்துக்கே உரிய கலைகளான வில்லுபாட்டு, கணியான் கூத்து, சிலம்பம் உள்பட பல நாட்டு புற கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்துள்ளார். இந்த நூலில் நையாண்டி மேளம் தோன்றிய வரலாறு, மேள கலைஞர்கள், கரகாட்டம், பெண் கரகம் நெல்லைக்கு வந்த வரலாறு, ஒயிலாட்டம், தேவராட்டம், வாய்ப்பாட்டு, நாடகம் என நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து நாட்டுப்புற கலைஞர்களைப் பற்றியும் இந்த நூலில் ஆசிரியர் தொகுத்துள்ளார்
விலை: 250 ரூபாய்

26. ஸ்ரீகுணவதியம்மன் ஆலய வரலாறு தமிழ் மற்றும் ஆங்கிலம்- பொன்சொர்ணா பதிப்பகம்
எழுத்தாளர் காமராசு எழுதிய முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் கோயில் வரலாற்றை திருவாளர் தி.கிருஷ்ணமூர்த்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டும் இந்த நூலில் உள்ளது. முத்தாலங்குறிச்சியிலிருந்து 7 தலைமுறைக்கு முன்னால் புலம் பெயர்ந்த சென்ற மக்கள் வெளிநாடுகளில் தமிழே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பிறந்த ஊரின் புகழை தெரிந்து கொள்ள வசதியாக இந்த நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
விலை 150 ரூபாய்

27. பனிமலையும் அபூர்வகண்டமும் - காவ்யா
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் காந்தவியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த ஆராய்ச்சி மையத்தில் இருந்து அண்டார்டிகா கண்டத்துக்கு ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் செல்கிறார்கள். முதல் முதலாக இந்தியாவின் சார்பில் தமிழர் இளங்கோ என்பவர் தலைமை ஏற்று ஆராய்ச்சிக்கு சென்று வந்துள்ளார். அண்டார்டிகாவில் நடந்த திகிலூட்டும் சம்பவங்கள் இதில் உண்டு. அதை பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கூறுவது போல் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பனிமலையில் பயணம் செய்தவர்களின் அனுபவமும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.
விலை 150 ரூபாய்

28. தோரணமலை யாத்திரை - பொன் சொர்ணா
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள இடம் தான் தோரணமலை. இந்த மலைக்கு யாத்திரை சென்று வருவதே பேரின்பம். ஒரே நாளில் ஏறி இறங்கி விடலாம். நோய் தீர்க்கும் அருஞ்சுனை நிறைந்த இடம். உலகத்தில் அகத்தியரும், தேரையரும் அமர்ந்து கபால ஆபரேஷன் செய்த இடம் இந்த தோரணமலைதான். தேரையர் சித்தர் அடக்கமான இடமும் இந்த மலைதான். இங்கு முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த மலைக்கு செல்லும் வழியெங்கும் மூலிகை நிறைந்த தென்றல் காற்று நமது மேனியை வருடும். தற்போது கூட இங்கு சித்தர்கள் தவமியற்றுவதாக நம்பப்படுகிறது. எனவே தோரணமலை யாத்திரை மேற்கொள்பவர்கள் பயபக்தியுடன் செல்லவேண்டும். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்று இங்கு வந்து வேண்டி நின்றால் அது கைகூடுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ராமர் பாதமும் இங்குள்ளது.
விலை 120 ரூபாய்

29.குலசேரகநத்ததம் கரும்புளிசாஸ்தா - பொன் சொர்ணா பதிப்பகம்
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள குலசேரகநத்தம் என்னும் ஊரில் கரும்புளி சாஸ்தா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர திருவிழாவின் போது பல ஆயிரம் மக்கள் கூடுவர். இந்த சாஸ்தாவை குலதெய்வமாக கொண்டவர்கள் பல முக்கிய பதவிகளில் உள்ளனர். எங்கள் ஊரை பூர்வீகமாக கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராமலிங்கம் போன்றவர்கள் இந்த சாஸ்தா கோயிலை குல தெய்வமாக கொண்டவர்கள். இவர்களது முயற்சியால் எழுத்தாளர் கரும்புளிசாஸ்தா வரலாற்றை நூலாக தொகுத்துள்ளார். உள்ளூர் வரலாற்றை தெள்ளத்தெளிவாக விவரித்துள்ளார். செவிவழி செய்திகளையும் தேவைப்படும் இடத்தில் சரியாக இணைத்துள்ளார்.
விலை 75 ரூபாய்

30. செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தா - பொன்சொர்ணா பதிப்பகம்
எழுத்தாளர் வசிக்கும் ஊரான செய்துங்கநல்லூரில் உள்ள சுந்தரபாண்டிய சாஸ்தா வரலாற்றை இந்த நூலில் தொகுத்துள்ளார். இந்த நூல் சாஸ்தாவின் வரலாற்றை மட்டுமின்றி தென் தில்லை என்று அழைக்கப்படும் செய்துங்கநல்லூர் கல்வெட்டு செய்திகளையும் தாங்கியுள்ளது. மிகவும சிறப்புபெற்ற இந்த நூல் மும்பை அன்னதான அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டது. இந்த நூலை மேனாள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் தொ.பரமசிவன் வெளியிட அறிஞர் முல்லை முருகன் பெற்றுக் கொண்டார்.
விலை 150 ரூபாய்

31. தரணி போற்றும் தாமிரபரணி - பொன் சொர்ணா பதிப்பகம்
தாமிரபரணிக்கு சிறிய நூல் ஒன்று வேண்டும் என்ற எழுத்தாளரின் ஆசையை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட நூல் இது. தாமிரபரணி பற்றி எழுதப்பட்ட இந்த நூலில் பொதிகை மலையின் பெருமை, இங்கு வாழ்ந்த மகான்கள், அணைக்கட்டுகள், பாசன விவரம் ஆகியவை தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. தாமிரபரணியை பற்றி தகவல் சேகரிப்பவர்களுக்கு இந்த நூல் பெரிதும் உதவும்.
விலை 100 ரூபாய்

32. குருத்துவ பொன்விழா - பொன்சொர்ணா
ஆசிரியரின் குருநாதர் நல்லாசிரியர் அகஸ்தீஸ்வரன் கட்டளைக்கு இணங்க உருவான நூல். 50 வருடமாக குருத்துவ பணியாற்றிய அருட்தந்தை லூர்து ராஜா அடிகளாரின் வாழ்க்கை வரலாறு. புளியாலில் இருந்து தாமிரபரணி கரை வரை அவரால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள், பணிகள் குறித்து வெளி வராத தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
விலை 75 ரூபாய்

33. தென்பாண்டிச்சீமை - சில சமுதாய குறிப்புகள் - காவ்யா பதிப்பகம்
நூலக ஆணை பெற்ற நூல். தென்பாண்டிச் சீமையான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கல்விப்பணி மற்றும் சமுதாய பணிக்கு தொண்டாற்றியவர்கள் குறித்து 257 பக்கங்களில் தொகுக்கப்பட்ட நூல். தென்பாண்டிச்சீமைய பாகம் 1 என்னும் நூலின் குறிப்பிட்ட சில பகுதிகள் இதில் இடம் பெற்றுள்ளது.
விலை 250 ரூபாய்

34. முத்தாலங்குறிச்சி காமராசுவின் நாடகங்கள் - பொன்சொர்ணா பதிப்பகம்
சிறுவயதில் இருந்து ரேடியோ, மேடை மற்றும் பல இடங்களில் காமராசு எழுதிய நாடகங்களின் தொகுப்பு இது. இந்த நூலை காமராசுவின் சிஷ்யரும், பத்திரிகையாளருமான சுடலைமணிச்செல்வன் தொகுத்துள்ளார். இந்த நூல் தொகுப்பாளரின் 19 வயதில் வெளி வந்த சிறப்புக்குரியது.
விலை 250 ரூபாய்

35. அத்ரி மலையாத்திரை - சூரியன் பதிப்பகம்
தினகரன் நாளிதழின் இணைப்பாக சனிக்கிழமை தோறும் வெளியாகும் ஆன்மிக மலரில் பிரசுரமான தொடர் அத்ரி மலை யாத்திரை. இந்த தொடர் பல லட்சம் வாசகர்களின் மனதை கொள்ளை கொண்ட சிறப்புக்குரியது. இந்த தொடரை ‘அத்ரி மலை யாத்திரை’ என்ற பெயரில் சூரியன் பதிப்பகம் தனி நூலாக வெளியிட்டுள்ளது. இந்த நூலில் அத்ரி, தோரணமலை, குற்றால மலையின் பெருமைகள் குறித்த தகவல்கள் விரிவாக இடம் பெற்றுள்ளது.
விலை 160 ரூபாய்

36. தென்னகக்கோயில்கள் - காவ்யா பதிப்பகம்
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பல்வேறு இதழ்கள் எழுதிய கோயில்கள் வரலாறு 36யை இந்த நூலில் தொகுத்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங் களிலுள்ள சில முக்கியத் தலங்களுக்குச் செல்ல இந்த நூல் மிக்க உதவியாக இருக்கும். செண்பகராமநல்லூர், கீழப்பாவூர், அனவரதநல்லூர், குற்றாலம், மன்னார்கோயில், ஆழ்வார்குறிச்சி, குரங்கனி, குறுக்குத்துறை, கருப்பன் துறை, பொன்னாக்குடி, குலசேரகபட்டினம், ஆறுமுக மங்கலம், ஆத்தூர், ஏரல் , தென்காசி, செய்துங்கநல்லூர், குலசேகரநத்தம், கொழுந்து மாமலை, அய்யனார்குளம் பட்டி, மணிமூர்த்தீஸ்வரம், ஆய்குடி, தச்சநல்லூர், அம்பாசமுத்திரம், கீழஆம்பூர், மேலநத்தம், முத்தாலங்குறிச்சி, சி.என்.கிராமம், ஆழ்வார்குறிச்சி, ஆரால்வாய் மொழி, சேரன்மகாதேவி, கரிசூழ்ந்த மங்கலம், நெல்லை டவுண் மண்டபம், தூத்துக்குடி ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களை இந்த நூலில் தொகுத்துள்ளார்.
விலை 250 ரூபாய்

37.குளத்தூர் ஜமீன்கதை
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் குளத்தூர் ஜமீன்தார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஜமீனை முன்பணம் கட்டி ஏலத்துக்கு எடுத்து நடத்தியுள்ளார்கள் என்பது கூடுதல் தகவல். தற்போது நெல்லை டவுணில் வசித்து வரும் இவர்களது வாரிசுகள் பற்றிய அபூர்வ தகவலை உள்ளடக்கியது இந்த நூல்.
விலை 175 ரூபாய்

38. சேத்தூர் ஜமீன் கதை - காவ்யா பதிப்பகம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஜமீன் சேத்தூர் ஜமீன். இவர்கள் அரண்மனை கூட தற்போது இல்லை. ஆனால் இவர்களது ஜமீன்தார் சேவுக பாண்டியன் செய்த அரும்பணிகள் எல்லாம் தற்போதும் சேத்தூர், தேவதானம், ராஜபாளையம் போன்ற பகுதியில் கல்வெட்டாய் பதிந்து உள்ளது. பள்ளிகூடமாய், தண்ணீர் தொட்டியாக, கோயில் கோபுரமாக இவர் புகழ் பாடிக்கொண்டிருக்கிறது. இவர்களை பற்றிய அரிய தகவலுடன் இந்த நூல்.
விலை 150 ரூபாய்

39. நெல்லை வரலாற்று சுவடுகள் - காவ்யா பதிப்பகம்
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தினகரன் நாளிதழில் வட்டார செய்திகள் என்ற தலைப்பில் பல துணுக்கள் எழுதி வந்தார். இதில் ஒரு பக்கத்திலேயே படம் மற்றும் செய்திகள் கொண்ட தகவல்கள் 207 ஐ தன்னகத்தே கொண்டது இந்த நூல். இந்த நூலில் அபூர்வ தகவல்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதியுள்ளார். இந்த நூல் தமிழக அரசு நூலக ஆணை பெற்றுள்ளது.
விலை 240 ரூபாய்

40. எனது பயணங்கள் - காவ்யா பதிப்பகம்
சான்றோர் மலரில் முத்தாலங்குறிச்சி காமராசு தொடராக எழுதிய எனது ‘மலைப்பயணங்கள்’ என்ற தொடரை தொகுத்து ‘எனது பயணங்கள்’ என்ற தலைப்பில் இந்த நூலை வெளியிட்டுள்ளார். தன்னுடைய சொந்த ஊருக்கு எதிர்கரையில் உள்ள மணக்கரை மலையில் துவங்கி, கருங்குளம் மலை, ஆதிச்சநல்லூர் குன்று, கழுகுமலை, தோரணமலை, நம்பிமலை, பைம் பொழில் மலை, கம்பிளி மலை என உள்ளூர் பயணம் செய்து, கோவா, மும்பை போன்ற பகுதியிலும் இவர் சென்ற அனுபவங்களை தொகுப்பாக எழுதியுள்ளார்.
விலை 320 ரூபாய்

41.நெல்லைக்கோயில்கள் - காவ்யா பதிப்பகம்
ஏற்கனவே இவர் எழுதிய ‘நெல்லை வைணவக்கோயில்கள்’, ‘நெல்லை சைவக்கோயில்கள்’, ‘தென்னகக் கோயில்கள்’ என்ற நூல்கள் வரிசையில் தற்போது ‘நெல்லைக்கோயில்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். இதில் நெல்லை கோயில்கள் மட்டுமல்லாமல் நெல்லை மக்களுடன் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம் திற்ப்பரப்பு மகாதேவர் ஆலயம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவதானம் கோயில் வரை சேர்த்துள்ளார். இதில் மொத்தம் 21 கோயில்கள் வரலாறு வெளியிடப்பட்டுள்ளது. களக்காடு, பாபநாசம், ஆராய்ச்சிபட்டி, ஓமநல்லூர், கரிசூழ்ந்தமங்கலம், கயத்தாறு, கீழகல்லூர், கோவில்பட்டி, மாறந்தை, பிரம்மதேசம், ராஜவல்லிபுரம், சொக்கம்பட்டி, வசவப்பபுரம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில், தாருகாபுரம்,கரிவலம் வந்த நல்லூர், தென்மலை, தேவதானம் ஊரில் உள்ள கோயில்கள் இதில் அடங்கும்.
விலை 190 ரூபாய்

42. சிங்கம்பட்டி ஜமீன் கதை - காவ்யா பதிப்பகம்
தமிழகத்தில் பட்டம் கட்டி வாழும் ஒரே ஒரு ஜமீன்தார் சிங்கம் பட்டி ஜமீன்தார். இவரை பற்றி பல நூல்களில் குறிப்புகள் வெளிவந்துள்ளது. ஆனால் இவரை பற்றி தனி நூல் இதுவரை வெளியிடப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு முத்தாலங்குறிச்சி காமராசு இந்த நூலை வெளியிட்டுள்ளார்.
விலை 180 ரூபாய்

43. ஜமீன் கோயில்கள் - சூரியன் பதிப்பகம்
தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ஆன்மிக பலன் என்னும் மாதம் இரு முறை வெளியாகும் இதழில் எழுதிய தொடர் தற்போது நூலாக வெளிவந்துள்ளது. இதில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்ட ஜமீன்தார்கள் வணங்கிய கோயில்கள் குறித்தும் அவர்கள் வரலாறு குறித்தும் எழுதியுள்ளார். நாட்டாத்தி , சாத்தான்குளம், சிங்கம்பட்டி, ஊத்துமலை, குளத்தூர், சிவகிரி, சுரண்டை, கடம்பூர், பாஞ்சாலங்குறிச்சி, தலைவன் கோட்டை, சேத்தூர், கொல்லங்கொண்டான், சாப்டூர், ஊர்காடு ஜமீன்களை பற்றிய வரலாறு இதில் உள்ளது.
விலை 140 ரூபாய்

45 படைப்புலகில் முத்தாலங்குறிச்சி காமராசு பொன் சொர்ணா பதிப்பகம்
பாளை சாராள் தக்கர் கல்லூரியில் எம்.பில் பட்டம் பெற்ற அந்தோணியம்மாள் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு குறித்து எழுதிய ஆய்வு நூல். அந்தோணியம்மாள் செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தினை சேர்ந்தவர். ஆய்வியல் நிறைஞர் பட்டம் இந்த ஆய்வு மூலம் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. எழுத்தாளரின் வாழ்க்கை, ‘முத்தாலங்குறிச்சி காமராசு படைப்பில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சிறுகதை, நாவல் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.
விலை 75 ரூபாய்

46. முடிச்சு மேலே முடிச்சு (நாடகம்) பொன்சொர்ணா பதிப்பகம்
முடிச்சு மேலே முடிச்சு என்ற தலைப்பில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நாடகமே இந்த நூல். இது ஒரு கிராம மேடை நாடகம். நகைச்சுவை மாமியார் மருமகள் சண்டை, பில்லி சூனியம் என சுவையான சம்பவங்களை கொண்ட இந்த நாடகத்தின் முடிவில் இந்த நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்துள்ளார். 1995 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் வெட்டிகுளம் என்னும் கிராமத்தில் இவர் எழுதி இயக்கி கதாநாயனாக நடித்த நாடகம். சுமார் 27 வருங்கள் கழித்து , தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகில் உள்ள கிளாக்குளத்தில் இந்த நாடகம் மீண்டும் அரங்கேறியது. அனைவர் மனதிலும் இடம் பிடித்தது. இதில் எழுத்தாளரின் மகன் அபிஷ் விக்னேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நாடகம் அப்படியே கிராமத்தோடு கிராமாக அழிந்து போய் விடக்கூடாது என மீடியா கிருக்கன் டீயூப் செணலில் பிரசுரம் செய்துள்ளார்கள். தொடர்ந்து நூலாக ஆக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் மேடை நாடகம் நடிப்போருக்கு நல்லதொரு நூல் இதுவாகும்.
விலை 75 ரூபாய்

47 நெல்லைக்கோயில்கள் பாகம் 2 காவ்யா பதிப்பகம்
ஏற்கனவே இவர் எழுதிய ‘நெல்லை வைணவக்கோயில்கள்’, ‘நெல்லை சைவக்கோயில்கள்’, ‘தென்னகக் கோயில்கள்’ என்ற நூல்கள் வரிசையில் ‘நெல்லைக்கோயில்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதன் இரண்டாம் பாகம் தான் இது. சித்தர்கள் போற்றும் அத்ரி மலை, திருக்குறுங்குடி நம்பி , திருச்செந்தூர் செந்தில்நாதன், குலசை முத்தாரம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர், விஜயாபதி விசுவாமித்ரர், வல்லகுளம் சின்னதம்பி சாஸ்தா, கோவில்பட்டி சங்கரலிங்கசுவாமி, படுகையூர் ஐந்து மரத்து சுடலை, கொற்கை கண்ணகி அம்மன், வசவப்பபுரம் தென்னம்பாண்டி சாஸ்தா, தாமிரபரணியில் புஷ்கர திருவிழா, கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா, பிராஞ்சேரி கரையடிமாடன், வசவப்பபுரம் வரதராஜன், பணகுடி இராமலிங்கேஸ்வரர் உள்பட 16 கோயில்களின் வரலாறு உள்ளது.
விலை 190 ரூபாய்

48. நவீன தாமிரபரணி மகாத்மியம்
( உலக நதிகள் வரலாற்றில் முதல் வீடியோ டிஜிட்டல் நூல்) பொன்சொர்ணா
உலக நதிகள் வரலாற்றில் முதல் வீடியோ டிஜிட்டல் நூல் என்ற பெருமை இந்த நூலுக்கு உண்டு. அதுபோலவே தாமிரபரணி கரையில் உள்ள அனைத்து முக்கிய கோயில்கள் வரலாறு அடங்கிய முதல் நூல் என்று கூறினாலும் இந்த நூலுக்கு தகும். 150 பகுதியும் தாமிரபரணி கரையின் பெருமையை புகழ் பாடக்கூடியது. அதோடு மட்டுமல்லாமல் நூலில் ஒவ்வொரு எபிசோட் பகுதியிலும் உள்ள க் யூ ஆர் கோடு மூலம் நவீன போனில் ஸ்கேன் செய்யும் போது ஆசிரியர் வீடியோவில் தோன்றி வரலாற்றை பேசுவார். இது இதுவரை எந்த நதிகள் நூலுக்கும் யாரும் செய்யாத ஒரு புதுமை. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் படிக்க தெரியாவிட்டாலும் இந்த முறையில் ஆசிரியர் பேசுவது மூலம் தாமிரபரணி பெருமையை தெரிந்து கொள்ளலாம். தாமிரபரணி மகா புஷ்கரத்தினை யொட்டி வேளாக்குறிச்சி ஆதினக்கர்த்தா அவர்களின் உதவியுடன் வெளிவந்த பெருமையான நூல். மகாபுஷ்கரத்தில் ஒவ்வொரு வி.ஐ.பிகளும் தாமிரபரணியில் குளிக்கும் படங்கள் கலரில் மிகச்சிறப்பாக அலங்கரிக்கிறது. தாமிரபரணி கரை ஆன்மிகத்தில் முழுமையான முதல் நூல் இதுவாகும். உலக நதிகள் வரலாற்றில் முதல் வீடியோ நூலும் இதுதான்.
விலை 450 ரூபாய்

49. தேரிக்காட்டு ஜமீன்தார்கள் ( தி தமிழ் இந்து )
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு தி தமிழ் இந்து பதிப்பகமான தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் முதல் நூல். இந்த நூலுக்கு நெல்லை தமிழில் பேசி கதை சொல்லும் யுக்தி உண்டு. குறிப்பாக தேரிக்காடான சாத்தான்குளம், நட்டாத்தி ஆகிய இரண்டு இடங்களில் வாழ்ந்த ஜமீன்தார்களின் வரலாறு இது. எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் ஆணைக்கிணங்க. ஓடி, ஓடி, தேடித் தேடி இரு ஜமீன் வரலாற்றையும் கண்டு பிடித்து மிகச்சிறப்பாக எழுதியுள்ளார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் அனைத்து தமிழ் பத்திரிககையும் இந்த நூலுக்கு பிரமாண்டமான அணிந்துரை எழுதியுள்ளார்கள். குங்குமம் ஆசிரியர் கே.என்.சிவராமன் தினகரன் வசந்தம் இதழில் இந்த ஜமீன் வரலாற்றை மேற்கோள் காட்டி மிகச்சிறப்பாக எழுதியுள்ளார். இதுபோல் பல்வேறு பத்திரிக்கையாளர்களுக்கு மூல நூலாக இந்தநூல் விளங்குகிறது. சினிமா துறையினர் ஆர்வத்துடன் இந்த நூலை வாங்கி படித்து வருகிறார்கள். விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் அற்புத நூல் இதுவாகும்.( இரண்டாவது பதிப்பு வெளிவர வுள்ளது)
விலை 170

50. அருள்தரும் அதிசய சித்தர்கள் (தினத்தந்தி) (முற்றிலும் கலர் பக்கத்திலானது)
தினத்தந்தி பதிப்பகத்துக்கு இந்நூல் 50 வது நூலாகும். முழுக்க முழுக்க கலர் பக்கத்தினால் இந்த நூல் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த 30 ஆண்டுகளாக தினத்தந்தியில் தொடர் எழுத வேண்டும் என ஆசைப்பட்டார். அந்த ஆசை அருள் தரும் அதிசய சித்தர்கள் தொடரால் பூர்த்தியானது. குற்றாலம் மௌன சுவாமிகள், இளையரசனேந்தல் பேப்பர் சுவாமிகள், காசிமேஜர்புரம் செண்பசாதுசுவாமிகள், பசுவந்தனை சங்கு சுவாமிகள், பாலாமடை நீலகண்ட தீட்சிதர், பனையூர் சித்தர்கள், நெல்கட்டும் செவல் ராமர்சுவாமிகள், சங்கரன் கோயில் வேலப்ப தேசிகர், குலசை ஞானியார் அடிகள், கொம்மடிக்கோட்டை வாலகுமாரசுவாமிகள், கீழப்பாவூர் பரதேசி சுவாமிகள், நெல்லை டவுண் அமாவாசை சித்தர், அண்ணாமலை புதூர் பெரியசாமி சித்தர், பாறைப்பட்டி சிவனய்யா சித்தர், வள்ளியூர் வேலாண்டி தம்பிரான், பரதேசி சித்தர், நெட்டூர் அப்பரானந்த சுவாமிகள், மாறந்தை ஸ்ரீசெட்டி சுவாமிகள், குற்றாலம் ஐந்தருவி சுவாமிகள், செங்கோட்டை ஆறுமுகசுவாமிகள், நவ்வலடி வேலாயுத சுவாமிகள், பண்பொழி சிவகாமி சித்தர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூலில் பதிவிட்டுள்ளார். இந்தநூல் மிகவும் பிரசித்தி பெற்ற நூல். அனைத்து ஆன்மிக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
( இரண்டாவது பதிப்பு வெளிவர உள்ளது.)
விலை ரூ 160

51. தென்னாட்டு ஜமீன்கள்(காவ்யா)
தமிழகத்தின் தென்னாடு என குறிப்பிட்டாலும் நெல்லைச் சீமையை மையமாக வைத்து 18 ஜமீன்களின் வரலாற்றையே நூலாசிரியர் தொகுத்திருக்கிறார்.
மறவர், நாயக்கர் உள்ளிட்ட பல பிரிவுகளைச் சேர்ந்த ஜமீன்களின் அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் நூலில் விவரித்து இருப்பது பாராட்டுக்குரியது.
ஊர்க்காடு ஜமீனில் சிலம்பத்தில் சுப்புத் தேவர் அய்யங்கார் வரிசை குறித்து படிக்கும் போது ஆச்சரியம் ஏற்படுகிறது. கழுதையை வாயால் கடித்து தூக்கி எறிந்த சுந்தரத்தேவர், குத்தாலிங்கத் தேவர் கொள்ளையர்களாக இருந்து தற்போது தெய்வமாக வணங்கப்படும் சிவகாம தேவர் சகோதர்கள், காதலித்த பெண்ணுக்காக நதியைத் திருப்பி ஊத்து மலை ஜமீன் கோட்டை கட்டியது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்தது, இதனால் ப¬£ளையங்கோட்டை ஆங்கிலேயரால் அப்போதே தாக்கப்பட்டிருப்பது. குளத்தூர் ஜமீன் கப்பலோட்டி தமிழர் வ.உ.சிதம்பனாரை ஆதரித்தது போன்ற பல பல சம்பவங்களை நூலில் விரவிக் கிடக்கிறது.
நூலாசிரியர் பத்திரிகை ஆசிரியர் என்பதால் ஜமீன்களின் வரலாறுகளைச் செய்தி அடிப்படையில் கண்டது, கேட்டது, படித்தது என பரந்து பட்ட பார்வையில் தொகுத்திருக்கிறார்.

விலை ரூ 1000/-
52. வளங்களை அள்ளித்தரும் வல்லநாட்டு சித்தர் - தினமலர் தாமரை மீடியா பதிப்பகம்
வள்ளலாரின் வழித்தோன்றல் என அழைக்கப்படும் வல்லநாடு சித்தர் மிகவும் பிரசித்தி பெற்றவர். தூத்துக்குடி மாவட்டம் தாமிபரணி கரையில் உள்ள வல்லநாடு அருகில் உள்ள பாறைக்காட்டில் சமாது நிலை அடைந்த அவர் ஆலயத்தில் தற்போதும் அவர் ஏற்றி வைத்த விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் காட்சி தரும் சித்தர். தனது உடலை பல பாகங்களாக பிரித்து தியானம் செய்யும் அபூர்வ சித்தர். மூலிகை மருந்தால் பல நோய்களை குணமாக்கும் சித்தர். இவரின் வரலாற்றை சுவைப்பட கூறுகிறது இந்த நூல்.
- விலை 260
53. தவழ்ந்து வரும் தாமிரபரணி - பொன்சொர்ணா பதிப்பகம் & விலை 500
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணி கரையில் சுமார் 30 வருடங்கள் பயணித்த அனுபவத்தினை இந்த நூலில் எழுதியுள்ளார். இந்த நூலில் சங்க கால பாடல்களில் பொருநை, பொதிகை மலை, தாமிரபரணி கரையில் உள்ள ஊர்களில் உள்ள கல்வெட்டுகள். பாலங்களின் வரலாறு. முதல் அச்சுகலை தோன்றிய தாமிரபரணி கடலில் கலக்கும் புன்னகாயல் வரலாறு. தாமிரபரணி அழிவு, நதியை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தவர்கள். மாவட்ட ஆட்சிதலைவர்களின் பெயர் பட்டியல். தற்போது தாமிரபரணியை காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என இந்த நூலில் பல பெருமைகள் கொட்டிக்கிடக்கிறது. மொத்தத்தில் தாமிபரணியை நேசிக்கும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் இது.
54. கரிசல்காட்டு ஜமீன்தார்கள் - காவ்யா பதிப்பகம் விலை 350பாளையக்காரர்கள் எனப்படும் ஜமீன்தார்கள் குறித்த நூல்கள் தமிழில் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இந்த நூல் தென் தமிழகத்தைச் சேர்ந்த இளையரசனேந் தல், குருவிகுளம் ஜமீன்தார்களைப் பற்றியது. அந்த வகையில், இரு ஜமீன்களின் பூர்விகம் வாழ்க்கை முறை ஆன்மிக சமுதாயப்பணிகள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் சுவாரசியமான முறையில் கூறப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிவிடும்

சம்பவத்தின்போது அனைத்து பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்கள் அழைப்பு விடுத்தனர். அதைப் பார்க்கும் பாளையக்காரர்கள் அஞ்சி ஒழுங்காக கப்பம் கட்டுவார்கள் என்பதே அந்த அழைப்பின் நோக்கம். ஆனால், வீரத்தின் வினை நிலமாகத் திகழ்ந்த இளையரசனேந்தல் ஜமீன் தார் அந்த துயர சம்பவத்தைக் காண வரவில்லை. இதனால், பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தி 14 கிராமங்களைக் கொண்ட இந்த ஜமீனை பகுதி 1, பகுதி 2 என ஆங்கிலேயர்கள் பிரித்தனர் என்ற தகவல் இளையரசனேத்தல் ஜமீனின் பலத்தை எண்ணி ஆங்கிலேயர்கள் அஞ்சியதை எடுத்துக் காட்டுகிறது.

காலண்டர்களில் உயிரோட்டமான தெய்வ ஒவியங்களை வரைந்து கொடுத்த ஓவியர் கொண்ட டையராஜுலுவுக்கு அடைக்கலம் அளித்து ஆகரித்தவர் இளையரசவேத்தல் ஜமீன்தார் ஆர்.எஸ். அப்பாசாமி என்பது பலர் அறியாத தகவலாக இருக்கக்கூடும்.

"பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்த குருவிகுளம் ஜமீன் பற்றியும் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 'இந்த ஜமீன் அரண்மனை இப்போது தீப்பெட்டி நிறு வனம் செயல்படும் இடமாக மாறியிருப்பதும், ஒரு காலத்தில் இந்த அரண்மனையில் ராஜா தர்பார் எத்துணை சிறப்பாக நடந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கும்போது தன்னையறியாமல் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது என்கிறார் நூலாசிரியர் .இதைப் படிப்பவர்களையும் அந்த சோகம் தொற்றிக்கொள்ளும். கட்டுரைகளுக்குப் பொருந்தமான ஏராளமான புகைப்படங்கள் நூலுக்கு அணி சேர்க்கின்றன.

55. பொருநை ஆதிச்சநல்லூர் அறிக்கைகளும் அருங்காட்சியகங்களும் - பொன்சொர்ணா பதிப்பகம் விலை 400
தாமிரபரணி கரை நாகரீகமான பொருநை நாகரீகம், ஆதிச்சநல்லூர் பெருமைக்காக 2017 ல் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் ஏற்கனவே ஆதிச்சநல்லூர் ஆய்வுகள், ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017, ஆகிய இரண்டு நூல்களை அகழாய்வுக்கான நூல்களாக எழுதியுள்ளார். தொடர்ந்து இவருக்கு வெற்றி கிடைத்த பிறகு மத்திய அரசு உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி தமிழக முதல்வர் அறிவித்த பொருநை அருங்காட்சியகம் இடம் தேர்வு உள்பட பல தகவல்கள் இதில் கொட்டிக்கிடக்கிறது. சென்னை, மற்றும் பொருநை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மாதிரி அருங்காட்சியகத்தினை படத்துடன் பட்டியலிட்டு இருப்பது. அலெக்ஸாண்டர் இரியாவின் அறிக்கை உள்பட 10க்கு மேற்பட்ட அறிக்கைகளை நவீன க்யூஆர் கோடு வசதியில் ஸ்கேன் செய்து பார்க்கும் வகையில் எழுதியிருப்பது இந்த நூலின் சிறப்பாகும்.
56.களரி அடிமுறை - 1 உலக களரி அடிமுறை கூட்டமைப்பு (அமெரிக்கா)
உலக களரி அடிமுறை கூட்டமைப்பு அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அதன் நிறுவனர் திரு ரமேஷ் ரத்தகுமார், இணை நிறுவனர் திரு. சேகர் ஜி. மனோகரன் ஆகியோர் முயற்சியில் நடந்து வருகிறது. களரி தொன்மையான தமிழரின் கலை . அதை மீட்டெடுத்து உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று செயல்பட்டு வருகின்றனர். அதற்காக பல நூல்கள் களரியை பற்றி எழுத வேண்டும் என்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவை நியமனம் செய்துள்ளனர். முத்தாலங்குறிச்சி காமராசு களரி பற்றி எழுதிய முதல் பாகம் இது. களரி தோன்றிய விதம் , தெற்கன் களரிக்கும் வடக்கன் களரிக்கும் உள்ள வித்தியாசம் உள்பட பல்வேறு தகவல்களை நூலாசிரியர் இதில் விளக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் களரி தோன்றிய இடங்களை தேடி பயணித்த நாள்களை இந்த நூலில் ஆசிரியர் விளக்கமாக எழுதியுள்ளார். அவர் தேடி அலைந்து வாழும் ஆசான்களின் வரலாற்றையும் இதில் பட்டியலிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் வாழ்த்துரையுடன் மிகவும் தரமான லித்தோ கலர் பேப்பரில் உலகதரத்தில் உருவான நூல் இது.
விலை 299/-
57. மரம் நடும் மாமனிதர்- பொன்சொர்ணா
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கோபாலசமுத்திரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஏழைகள் கந்து வட்டி வாங்குவதை தடுக்க மகளிர்குழு ஆரம்பித்து பல குடும்பங்களை வட்டி கொடுமையில்இருந்து காத்தவர். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அய்யா காட்டிய வழியில், அய்யா விவேக் அவர்களின் ஊக்கத்தில் பல லட்சம் மரங்களை தாமிரபரணி ஆற்றங்கரையில் நட்ட டாக்டர் சுந்தரேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு இது.
விலை 200
58. சக்தி நாதன் எனும் சகாப்தம் - பொன்சொர்ணா பதிப்பகம் விலை 200
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் சக்தி நாதன். இவர் அண்ணா பல்கலைகழக முதல்வராக பணியாற்றியவர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நீர் நிலைகளை தூர்வார அரசுடன் இணைந்து செயல் பட்டவர். இவருடைய வரலாற்றை இந்த நூலில் தொகுத்து எழுதியுள்ளார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. அவர் குடும்பம், அவர் செய்த சாதனை, அவர் வாங்கிய விருது என எழுதியவர். கொரோனா நோய் காலத்தில் இந்த உலகத்தினை விட்டு சக்திநாதன் பிரிந்ததை எழுதும் போது கண்ணில் நீர் சொட்ட வைக்கிறார். ஆனாலும் அவர் நினைவாக இன்றும் நதி உயிர்பித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கும் போது மனதுக்கு நிம்மதியை தருகிறது.
59. பூவே புனிதா - பொன்சொர்ணா பதிப்பகம் விலை 150
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா கருங்குளம் பஞ்சாயத்து கிளாக்குளம் என்னும் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம். புனிதா என்னும் பிஞ்சை , அது மலரும் முன்பே நசுக்கிய காமுகனையும், அதனால் எழுந்த போராட்டமும், அவ்வூருக்கு கிடைத்த நன்மைகளையும், தீமைகள் பற்றியும் எழுதிய நூல் . இந்த நூலில் அபலை பெண்ணுக்கு ஆதரவாக சிட்டுகுருவி ஒன்று கதை சொல்வது போல சொல்லியிருக்கும் விதம் மிகவும் சிறப்பு. இந்த நூல் அமேசான் கிண்டலில் மட்டும் பிரசுரமாகி உள்ளது.

60. தூத்துக்குடி மாவட்ட அறியப்படாத தியாகிகள் - தூத்துக்குடி மாவட்ட நிர்வாக வெளியீடு விலை 500/-

தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது, பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, வாஞ்சி நாதன், வீரபாண்டிய கட்டபொம்மன், அவருடைய தளபதிகள் வெள்ளையத்தேவன், வீரன் சுந்தரலிங்கம், ஊமைத்துரை, கட்டலாங்குளம் அழகுமுத்து கோன் ஆகியோர் தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் 250க்கு மேற்பட்ட அறியப்படாத சுதந்திரபோராட்ட வீரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளனர். இவர்களை பற்றிய தொகுப்புதான் இந்த நூல். தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆஷ் துரை கொலை, மணியாச்சி ரயில் நிலையத்திலும், குலசேகரபட்டினத்தில் லோன் துரை கொலையும் நடந்துள்ளது. திருச்செந்தூரில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நினைவு தூண் உள்ளது. அதுபோல கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் சுதந்திரபேராட்ட வீரர்களின் நினைவு தூண் உள்ளது. இதுபோன்ற என்னற்ற நினைவு சின்னங்களை கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத சுதந்திரபேராட்ட வரலாறுகள் படத்துடன் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இந்த நூல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு. கி. செந்தில் ராஜ் அவர்களால் வெளியிடப்பட்டது.