Description
முன்னீர் பள்ளமும், திருவேங்கடநாதபுரமும் எனக்கு மிக முக்கியமான ஊராக அமைந்தது. எனவே தான் முன்னீர்பள்ளமும் திருவேங்கேடநாதபுரமும் என்ற இந்த நூல் உருவானது. இந்த ஊரின் வரலாறு எழுதும் போது எனக்கு கோபாலசமுத்திரம் பஞ்சாயத்து தலைவரின் கணவர் வெங்கடேஷ், கவுன்சிலர் செல்வசங்கர், தருவை பிச்சுமணி, வல்லபபாண்டியன், நூலகர் அகிலன், சித்தி ஜான்சிராணி ராமச்சந்திரன், திருவேங்கடபுரம் தினமலர் சீனிவாசன் சாமி, பஞ்சாயத்து தலைவர் சேர்மதுரை, துணைத்தலைவர் குமரேசன், கிளார்க் குமரேசன் உள்பட பலருக்கும் நன்றி.
இந்த நூலுக்கு உதவி புரிந்த பலர் பெயர்களை அந்தந்த பகுதியில் குறிப்பிட்டு உள்ளேன். என்னோடு களப்பணியில் உதவியாக இருந்த பட்டிமன்ற பேச்சாளர் புத்தனேரி செல்லப்பா அய்யா, முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் உள்பட பலருக்கு நன்றி.
முன்னீர் பள்ளம் எனக்கு மிகவும் பிடித்த ஊர் எனவே தான் நீர்மம் நாவலில் முதல் பகுதியை முன்னீர் பள்ளத்தில் இருந்து துவக்கியிருப்பேன். தாமிரபரணி கரையில் நான் மிகவும் பார்த்து பரவசம் அடைந்த ஊர்களில் முன்னீர் பள்ளமும், திருவேங்கடநாதபுரமும் ஒன்றாகும்.






