மாரி எனும் மழை வெள்ளம் – காமராசு செல்வன்

330.00

Description

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்மாவட்டங்களான நெல்லை தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்த பேய் மழையும் அதனால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் வயதானவர்களில் இருந்து தற்போது உள்ள இளம் தலைமுறையினர் வரை மறந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த சமயத்தில் நான் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்தேன். பல்வேறு கால கட்டங்களில் மக்களின் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் என ஆங்காங்கே இருக்கும் பிரச்சனைகள் குறித்து செய்தி சேகரித்து வெளியிட்டு வந்தேன். இந்த மழையால் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் அதில் இருந்து அவர்கள் மீண்டு வர தமிழக அரசும், அதிகாரிகளும் எடுத்த நடவடிக்கையும் காணும் வாய்ப்பு கிடைத்தது.

மழை வெள்ளத்தின் போது நடந்த சம்பவங்கள், பாலங்கள் உடைந்தது, கரைகள் உடைந்தது என மழை வெள்ளத்தின் போது என்னவெல்லாம் நடந்ததோ அதில் எனக்கு தெரிந்த விஷயங்களையும், நான் நேரில் கண்ட நினைவுகளையும் இந்த நூலில் களப்பயணமாக சென்று புகைப்படம் எடுத்து, பதிவு செய்துள்ளேன்.

இந்த நூலை எழுத எனக்கு வித்திட்டவர் என் குருநாதர் தான். நிச்சயம் களப்பணி சென்ற அனுபவத்தினை எழுது-. இது பிற்காலத்தில் முக்கிய ஆவணமாக அமையும் என்று என்னை உற்சாகப்படுத்தினார்.

கால்டுவெல் எழுதிய நெல்லை சரித்திரம் என்ற நூலில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் இதே போல் வந்த வெள்ளமும், அதைத் தொடர்ந்து வந்து கொள்ளை நோயும் பற்றி எழுதியிருந்தார். அதை தற்போது படிக்கும் போது நமக்கு ஆவணமாக உள்ளது. அதுபோலவே இந்த நூல் 100 வருடம் கழித்தும் கூட வரலாறு பேசும் என்று கூறினார். உற்சாகத்துடன் பணியை தொடர்ந்தேன்.