பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வைத்து கிராமத்துக்குயில் என அழைக்கப்படும் முனைவர் ஆ. சந்திரபுஷ்பம் பிரபு எழுதிய கோலமிடாப் புள்ளிகள் என்னும் கவிதை நூல் வெளியிட்டு விழா நடந்தது.
yதிருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலைய உதவி இயககுநர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் தலைமை வகித்தார். திரைப்பட பாடலாசிரியர் அருண் பாரதி நூலை வெளியிட்டு பேசினார். மூத்த பத்திரிக்கையாளர் ஹஸன் வரவேற்றார். எழுத்தாளர் நெல்லை கவிநேசன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பணி நிறைவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி, ரோஸ்மேரி கல்லூரி முதல்வர் மாரியம்மாள், மாவட்டவேலை வாய்ப்புதுறை துணை இயக்குனர் பணி நிறைவு பிச்சம்மாள் ஆறுமுகம், பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகர் முத்துகிருஷ்ணன், திருநெல்வேலி அகில இந்திய வானொலி இயககுநர் ஜலாலுதீன், மாவட்ட மைய நூலக முதன்மை நூலகர் வயலற், ஹலோ எப்.எம். மேலாளர் சகாய ராஜ், அறிப்பாளர் வெங்கட், அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் ஜான் பிரதாப், உமா கனகராஜ், உக்கிரன் கோட்டை மணி, திடீயூர் ஈஸ்வரமூர்த்தி, முள்ளககாடு பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். அறிவிப்பாளர் வில்சி துரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நூலாசிரியர் சந்திரபுஷ்பம் பிரபு ஏற்புரை வழங்கினார். அறிவிப்பாளர் கரைச்சுற்று புதூர் கவிபாண்டியன் நன்றி கூறினார்.
படம் உள்ளது.
பாளையங்கோட்டை நூலகத்தில் கோலமிடாப் புள்ளிகள் கவிதை நூல் வெளியிட்டு விழா நடந்தது.


