செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 8-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்தது. சுமார் 32 அணிகள் மோதிய இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது.
போட்டிக்கு நாடார் மகாஜன சங்கத் துணைத் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார். நாடார் மகாஜன சங்க மண்டலச் செயலாளர் மதன் சுப்பிரமணியன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கினார்.
முதல் பரிசு: மேலநாட்டார்குளம் M.N.K. அணி
இரண்டாம் பரிசு: செட்டிக்குளம் C.K. லையன்ஸ் அணி
மூன்றாம் பரிசு: தாழையூத்து A.M.S.B. பிரதர்ஸ் அணி
நான்காம் பரிசு: சிங்காரப்பொட்டல் அணி
ஐந்தாம் பரிசு: பர்க்கிட் பாய்ஸ் அணி
சிறப்புப் பரிசுகள்:
சிறந்த பந்துவீச்சாளர் (Best Bowler): பர்க்கிட் மீரான்
சிறந்த விளையாட்டு வீரர்: செட்டிக்குளம் பிரவீன்
சிறந்த மட்டையாளர் (Best Batsman): பொன்னையா
ஆட்டநாயகன் (Man of the Match): பெருமாள் ராஜ்
மேலும், 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை மணிகண்டன் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் பேரூர் மன்ற உறுப்பினர் லிவிங்ஸ்டன், நாடார் மகாஜன சங்கத் தென்காசி மாவட்டச் செயலாளர் சுரண்டை செல்வம், மகாஜன சங்க உறுப்பினர் ரெட்டியார்பட்டி வேல்சாமி, செயற்குழு உறுப்பினர் மணிமுத்து, அறிவுத்துறை முருகேசன், திருநெல்வேலி இணைச் செயலாளர் மனோகரன், மணி, பி.வி. முருகப்பெருமாள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளைச் சக்திவேல், குமார், திவாகர், இளைஞரணி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


