தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகள் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் “கால் யுவர் கலெக்டர்” என்ற புதிய வாட்ஸ் அப் பதிவு மையத்தினை ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகள் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் “கால் யுவர் கலெக்டர் +918680800900” என்ற புதிய வாட்ஸ் அப் பதிவு மையம் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு வாட்ஸ் அப் பதிவு முகாமினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரடியாக கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் “கால் யுவர் கலெக்டர் : +918680800900” என்ற புதிய வாட்ஸ் அப் பதிவு மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்களின் குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி தங்களின் குறைகளை தீர்வு காண வேண்டும். மேலும், உங்களது நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் எடுத்துக்கூறி அவர்களது குறைகளையும் களைய தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என ஆட்சியர் பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன் (பொது), சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.