வடவல்லநாட்டில் ஊராட்சி மன்றம் சார்பில் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடந்தது.
கருங்குளம் ஒன்றியம் வடவல்லநாடு ஊராட்சி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவை ஊக்குவிக்கும் விதமாக வடவல்லநாடு அனைத்து கிராம பெண்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு வடவல்லநாடு பஞ்சாயத்து தலைவி பேபிசங்கர் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில், ஊராட்சியில் உள்ள அனைத்து பெண்களும் மகளிர் சுய உதவிக்குழு அமைத்து அரசு உதவி பெற வேண்டும், ஏற்கனவே 18ம் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உள்ள நிலையில் மேலும் மகளிர் சுய உதவிக்கு அமைக்க வேண்டும், மகளிர் வசிக்கும் பகுதிகளை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும், கொரோனா விழிப்புணர்வுகளை பின்பற்ற வேண்டும், சென்ற ஆண்டு வடவல்லநாடு ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட மகளிர் சுய குழுக்களுக்கு நிதி உதவி வழங்கிய பூவாணி கூட்டுறவு வங்கிக்கு நன்றி தெரிவித்தும், இந்தாண்டும் கூடுதலாக மகளிர் சுய உதவிக்குழு அமைத்து அதிக நிதி உதவி ஊராட்சி பகுதி மகளிர் பெற வேண்டும் எனவும் தீர்மானித்து விவாதம் நடந்தது.
இறுதியில் வடவல்லநாடு ஊராட்சி செயலர் சங்கர் நன்றி கூறினார்.


