சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவன வளாகத்தில் செயற்கை கால் அளவீடு முகாம் நடைபெற்றது. இதில் 70 பயனாளிகள் பங்குபெற்றனர்.
சென்னை எஸ்சி அகர்வால் அறக்கட்டளை, சாகுபுரம் டி.சி.டபிள்யூ லிமிடெட் நிறுவனம் சார்பில் டி.சி.டபிள்யூ வளாகத்தில் செயற்கை கால் அளவீடு முகாம் நடைபெற்றது. முகாமை டி.சி.டபிள்யூ லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ். சுரேஷ், தொடங்கி வைத்தார்.
நிகழ்சிக்கு எஸ். சி. அகர்வால் அறக்கட்டளையின் முகாம் அமைப்பாளர் என்.வி. சம்பத், ஒருங்கிணைப்பாளர்கள் சஞ்சீவ் அகர்வால் மற்றும் ஜான் வில்லியம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ அங்காள அகிலாண்டேஸ்வரி அமைப்பை சேர்ந்த ஜே. சந்திர மௌலி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

இந்த முகாமில் செயற்கை கால் பொருத்துவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 70 பயனாளிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.சி.டபிள்யூ லிமிடெட் நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் வழிகாட்டலின் பேரில் மக்கள் தொடர்புத் துறையினர் செய்திருந்தனர்.


