சாத்தான்குளம் கருமேனி ஆற்று பாலத்தின் அடியில் சாத்தான்குளம் – உடன்குடி கூட்டுக்குடிநீர் குழாயில் கடந்த பல மாதங்களுக்கு மேலாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சென்று கொண்டு இருந்தது மற்றும் சாத்தான்குளம் – உடன்குடி கூட்டுக்குடிநீர் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீட்டுக் குடிநீர் இணைப்பு பல்வேறு ஊராட்சிகளில் வீட்டிற்கு இணைப்பு மும்முரமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இணைப்பிற்கு சரியான அளவு குடிநீர் வழங்கப்பட போதிய நீர் ஆதாரம் இல்லை என்ற பொதுமக்களின் புகாரை ஏற்று திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்.
கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி, மாவட்ட திட்ட அலுவலர், துணை ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் பொன்னங்குறிச்சி, பேய்குளம், பன்னம்பாறை, சாத்தான்குளம், பொத்தகாலன்விளை பெரியதாழை ஆகிய பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான நீர்யேற்றும் நிலையங்களின் கொள்ளளவு மற்றும் நீர் ஏற்றும் திறனை தூத்துக்குடி மாவட்ட திட்ட அலுவலர் சரவணன் , துணை ஆட்சியர் ஸ்ருதயஞ்ஜெய் நாராயணன் , குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் செந்தூர் பாண்டியன், மகேஷ் ஜான்சன் சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பாண்டியராஜன், ராஜேஷ் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க ஆய்வு செய்தனர் இவர்களுடன் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், சாத்தான்குளம் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஜோசப் அலெக்ஸ் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பட்டதாரி பிரிவு தலைவர் ஜெபஸ் பிளஸ்வின் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் கருமேனி ஆற்று பாலத்தின் அடியில் குடிநீர் குழாயில் கடந்த பல மாதங்களுக்கு மேலாக உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சென்று கொண்டிருந்ததை ஆய்வு செய்து கூடிய விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.


