தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையைத் தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர்கள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியராகத் திருமணி ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூலை 17-ஆம் தேதி தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையின் தொடர்ச்சியாக, நிர்வாக நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் நிலையில் அதிரடி பணியிட மாறுதல் மற்றும் நியமனங்களைச் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மாறுதல் செய்யப்பட்ட அனைத்து அலுவலர்களும் உடனடியாகப் புதிய பணியிடங்களில் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்த உத்தரவு தொடர்பாக மேல்முறையீடு எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தனது ஆணையில் தெரிவித்துள்ளார்.
பணியிட மாற்ற விவரங்கள்:
1. தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) தனி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜெயப்பிரகாஷ், வெள்ளமடம் – ஏரல் விண்வெளி தொழிற்பூங்கா அலகு-3 தனி வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
2. வெள்ளமடம் – ஏரல் விண்வெளி தொழிற்பூங்கா அலகு-3 தனி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த மஞ்சுளா, தூத்துக்குடி கோட்டக்கலால் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக டி-பிரிவில் மாற்றுப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
3. ஓட்டப்பிடாரம், சாமிநத்தம், சில்லாநத்தம் சிப்காட் அலகு-2 முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த நல்லபெருமாள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்புப் பிரிவு தனி வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
4. மாவட்ட ஆட்சியர் அலுவலக வரவேற்புப் பிரிவு தனி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த உமா சங்கர், தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) தனி வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
5. தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான்ராஜ் மேக்டன், ஓட்டப்பிடாரம், சாமிநத்தம், சில்லாநத்தம் சிப்காட் அலகு-2 முதுநிலை வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
6. சிப்காட் அலகு-1 முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த மெர்சி, சிப்காட் தெற்கு வீரபாண்டியபுரம் அலகு-2 தனி வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
7. சிப்காட் தெற்கு வீரபாண்டியபுரம் அலகு-2 தனி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த மகேஸ்வரன், சிப்காட் அலகு-1 முதுநிலை வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
8. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத் தனி வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த மகாராஜா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
9. ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த வசந்தகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத் தனி வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டு, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.


