விட்டிலாபுரத்தில் பிரச்சாரத்தில் தொலைந்த தமிழிசை போன். 5 ஆயிரம் கொடுத்தால் தான் போன் என்ற குடிமகனால் பரபரப்பு.
கருங்குளம் ஒன்றியத்தில் பி.ஜே.பி வேட்பாளர் தமிழிசை வாக்கு சேகரிக்க வந்தார். இவர் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் வாக்குசேகரித்தார்.
வி.கோவில்பத்து பகுதியில் இருந்து கிளம்பி அவர் நாட்டார்குளம், விட்டிலாபுரம் உள்பட பகுதியில் பிரச்சாரம் செய்தார். தென் பண்டரி புரம் என்றழைக்கப்படும் பாண்டுரெங்கர் கோயிலுக்கு சென்று அவர் சாமி கூம்பிட்டார். தமிழிசைக்காக கோயிலை திறந்து கொடுத்தனர். ஆனால் அர்ச்சகர் இல்லை. ஆனாலும் மூலவரை வணங்கி விட்டு கோயிலை விட்டு வெளியே வந்தார். அப்போது அவருடன் வந்தவரின் போன் காணாமல் போய் விட்டது. அவர் அந்த போனை தேடினார். நவீன வசதிகள் அனைத்தும் கொண்டது அந்த போன். எனவே அதை தேடி அழைந்தனர். அப்போது அந்த போன் நம்பரில் தொடர்பு கொண்ட போது , அந்த போனை எடுத்தவர் செய்துங்கநல்லூரில் நிற்பதாகவும், ரூ5 ஆயிரம் கொடுத்து விட்டு போனை வாங்கி கொள்ளவும் என கூறிவிட்டார். எனவே உதவியாளர் செய்துங்கநல்லூருக்கு ஓடோடி வந்தார் . ஆனால் அங்கே யாரையும் காணவில்லை. மீண்டும் போன் செய்த போது அவர் விட்டிலாபுரத்துக்கு வரும் படி அழைத்தார். இவரும் சளைக்காமல் விட்டிலாபுரம் வந்த போது அந்த போனை கையில் வைத்திருந்த குடிமகன் ரூ 5 ஆயிரம் கேட்டார். ஆனால் அவரிடம் சமரசம் செய்து , 500 கொடுத்து போனை பெற்றுக்கொண்டனர். அவரும் சந்தோஷத்துடன் போனை கொடுத்து விட்டு சென்றார்.
அனவரதநல்லூர், வசவப்புரம் உள்பட பல பகுதியில் அவர் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருடன் அதிமுக ஒன்றிய செயலாளர் செங்கான், பி.ஜே.பி. ஒன்றிய தலைவர் பெரியசாமி, விட்டிலாபுரம் சோமசுந்தரம், ஆனந்த், வல்லநாடு செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.