தூத்துக்குடி அமிர்தா வித்யாலயா பள்ளியில் நாட்டின் பன்முகத் தன்மையை பறைசாற்றும் வகையில் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி அமிர்தா வித்யாலயா பள்ளியில் நாட்டின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் வகையில், மாணவியர்களும் ஆசிரியர்களும் இணைந்து வண்ணமயமான அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையைப் பாரம்பரிய முறையில் விமரிசையாகக் கொண்டாடினர்.
கேரளாவின் பாரம்பரியப் பண்டிகையான ஓணத்தைச் சிறப்பிக்கும் வகையில், பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து அழகிய அத்தப்பூ கோலங்களை வரைந்தனர். பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்களது மகிழ்ச்சியையும் திறமைகளையும் வெளிப்படுத்தினர்.


