தேர்தல் பிரச்சாரம் கடைசி நாளான நேற்று கருங்குளம் பகுதியில் கனிமொழி சூறாவளி பிரச்சாரம் செய்தார்.
அதிகாலை 6 மணிக்கே இவர் பிரச்சாரத்தினை துவக்கினார். வல்லநாடு, மணக்கரை, ஆறாம்பண்ணை புளியங்குளம் ஆகிய பகுதியில் சென்று வாக்கு சேகரித்தார். புளியங்குளத்தில் அப்பேத்கர் , இமானுவேல் சேகரன் ஆகியோர் படத்துக்கு மாலை அணிவித்தார். அதன்பின் பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அங்கிருந்தவர்கள் புளியங்குளத்துக்கு சாலை வசதி மற்றும் குடிதண்ணீர் வசதி இல்லை என கோரிக்கை வைத்தனர். தான் வெற்றி பெற்று வந்தவுடன் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறினார். அதன் பின் அவர் ஸ்ரீவைகுண்டத்துக்கு பிரச்சாரம் செய்ய கிளம்பினார்.
பிரச்சாரத்தின் போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, மாநில மாணவரணி துணை செயலாளர்உமரிசங்கர், ஸ்ரீவைகுண்டமதொகுதி பொறுப்பாளரும் காவல்காடு சொர்ண குமார், மாநில செயற்குழு பிரம்ம சக்தி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள், ஒன்றிய செயலாளர் கொம்பையாபாண்டியன் நகர செயலாரள் பெருமான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.