உப்பளத் தொழிலாளர்களுக்கான மழைக்கால நிவாரண நிதியை ரூ.5,000-லிருந்து ரூ.7,000-ஆக உயர்த்தியதற்காகத் தமிழக அரசுக்கு தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
உப்பளத் தொழிலாளர்களின் நலன் கருதி நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிய தமிழக அரசிற்குத் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மா.கிருஷ்ண மூர்த்தி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், உப்பளத் தொழிலாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் மழைக்கால நிவாரண உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு ஆவன செய்ய வேண்டும்.
உப்பளத் தொழிலாளர் நல வாரியத்தை உடனடியாக நடைமுறை செயல்பாட்டிற்குக் கொண்டு வரப் புதிய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


