வல்லநாடு அரசு மருத்துமனையில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி காசநோயாளிகளுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்ச்சிநடந்தது.
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சாராள் தக்கர் கல்லூரி பேராசிரியர் லைமா சாமுவேல் ஆகியோர் இணைந்து கிருஸ்துமஸ் விழாவை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் – காசநோயாளிகளுக்கு சத்துணவு மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி தலைமை வகித்தார்.
சித்த மருத்துவ மருந்தாளுநர் வெங்கடேசன் வரவேற்றார். சாராள் தக்கர் கல்லூரி ஒய்வு பெற்ற பேராசிரியர் லைமா சாமுவேல் அவர்கள் சார்பாக கிருஸ்துமஸ் கேக் வெட்டி ஏழை காசநோயாளிகளுக்கு சத்துணவை வழங்கினார். தொற்றா நோய் பிரிவு செவிலியர் ஸ்பிகிலா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை பணியாளர்கள் காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.