செய்துங்கநல்லூரில் மார்கழி பஜனை திருவிழா நடந்தது.
இதையொட்டி சோமசுந்தர விநாயகர் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதன் பின் விநாயகருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் மார்கழி பஜனை குழுவினர் வீதி உலா வந்தனர். சோமசுந்தர விநாயகர் கோயிலில் இருந்து கிளம்பிய பஜனை குழுவினர் பிள்ளையார் கோயில் தெரு, மூப்பனார் தெரு, மெயின்ரோடு உள்பட பல வீதிகள் வழியாக பஜனை பாடி வந்தனர்.
செய்துங்நல்லூரில் திமுக முன்னாள் செயலாளர் பட்டன் தலைமையில், சுவீட் கணேசன் முன்னிலையில் பஜனை குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். முத்துசாமி உள்பட பலர் இந்த நிகழச்சியில் கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தனர். மார்கழி பஜனை குழு ஏற்பாடுகளை சோமசுந்தரவிநாயகர் கோயில் சேனை தலைவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.