செய்துங்கநல்லூரில் இந்திய தொழில் சங்க மையம் , தூத்துககுடி மாவட்டககுழு சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது.
மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய செயலாளர் அப்பாககுட்டி முன்னிலை வகித்தார். மாவட்ட கட்டுமான தொழிற்சங்க செயலாளர் மாரியப்பன், தூத்துககுடி மாவட்ட சாலை போககுவரத்து சம்மேளன மாவட்ட செயலாளர் வயணப்பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் வெண்மணி தியாகிகள் 50 ஆண்டு நினைவு தினம் அனுசரிககப்பட்டது.அகில இந்திய அளவில் ஜனவரி 9 ந்தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என பிரச்சாரம் செய்யப்பட்டது.
கருங்குளம் ஒன்றிய விவசாய சங்கதலைவர் மணி, ஆட்டோ ª தாழில்சங்கம் மாரிமுத்து, கருங்குளம் ஒன்றிய கமிட்டி உறுப்பினர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.