செய்துங்கநல்லூரில் உள்ள மிகவும் பழமையான சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீபதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாணம் நடந்தது.
இதையொட்டி நேற்று மாலை 4 மணி அளவில் செய்துங்கநல்லூரில் காட்டுபெருமாள் கோயில் என அழைக்கப்படும் ரெங்கராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபத்மாவதி வரமங்கை தாயார் சமேத ஸ்ரீரங்கராஜ பெருமாள் எழுந்தருளி தங்கை பார்வதிக்கு முறைப்படி சீர்கொண்டு செல்லும் வைபவம் நடந்தது.
பெருமாள் கோயிலில் இருந்து ஊர்வலம் கிளம்பி செய்துங்கநல்லூர் முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயிலை வந்தடைந்தது. கைலாய இசை முழங்க, கோலாட்டம் உள்பட கொண்டாட்டம் நடைபெற, சிவனடியார்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அதன் பின் சிவன்கோயிலில் வைத்து சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் மிக விமர்சையாக நடந்தது. அதன் பின் பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு 9.35க்கு திருக்கோயிலில் பள்ளியறை பூஜை நடந்தது. அதை தொடர்ந்து இரவு கால பைரவர் பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆன்மீக பேரரவை மற்றும் செய்துங்கநல்லூர் கோவில்பத்து ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.