
செய்துங்கநல்லூர் செயிண்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ நடந்தது.
இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எலக்டிரிக்கல் மாணவர்களுக்கான கேம்பஸ் இண்டர்வியூ நடந்தது. இதில் டெக்சன் எனர்ஜிஸ் கம்பேனியை சார்ந்த அதிகாரிகள் மணி தாஸ்,பொன் மலைக்குமார் ஆகியோர் நேர்முக தேர்வு நடத்தினர். இதில் 18 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் ஜான் செண்பகதுரை உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.