நாட்டார்குளம் பங்கு தந்தை இல்லம் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய கெபி திறப்பு விழா நடந்தது. இந்த கெபியில் புனித அந்தோணியார் மற்றும் பிரகாசியம்மாள் சுரூபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கெவியின் முதல் அர்ச்சிப்பு மற்றும் பிரதிஷ்டை விழா நடந்தது . இதையொட்டி சிறப்பு திருப்பலி , ஆராதனை நடந்தது. திருப்பலியை நாட்டார்குளம் பங்கு தந்தை இருதயசாமி நடத்தினார். இதில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


