செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான ஆலயம் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிர பாதீஸ்வரர் ஆலயம் . இந்த ஆலயத்தில் திருப்பணி நடந்து, அதன் பின் கும்பாபிசேகம் நடந்தது. தற்போது கோயில் வருஷாபிசேகம் நடந்து முடிந்துள்ளது. இதையொட்டி சிவகாமி அம்மாள் சேமாஸ் கந்தர் ஆகியோர் சப்பர ஊர்வலம் நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 4 மணி அளவில் சிவன் மற்றும் அம்மனுக்கு சிறப்புஅபிசேகம் அலங்காரம் நடந்தது. அதன் பின் பஞ்ச வாத்தியங்கள் முழங்க வெவ்வெறு சப்பரத்தில் சிவகாமி மற்றும் சோமாஸ் கந்தர் பவனி கிளம்பினார். அன்னதான சத்திரம், மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, செய்துங்கநல்லூர் பஜார், வி.கோவில்பத்து வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
அதன் பின் சப்பரம் இறக்கப்பட்டு, திருவிழா முடிந்தது. இதற்கான பூஜைகளை அர்ச்சகர் பாலா நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆன்மிக பேரவையினர் செய்திருந்தனர்.