செய்துங்கநல்லூரில் எம்.ஜிஆர். 102 வது பிறந்த நாள் விழா அமமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை செயலாளர் முத்தையா, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் செல்லப்பா, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஓ.பி.முஸ்தபா, அவைத்தலைவர் பிள்ளைமுத்து, ஊராட்சி கழக செயலாளர் திருவரங்கம், பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ராஜ்பாண்டியன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணை செயலாளர் முருகன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் கோமதி நாயகம், மாவட்ட மாணவர் அணி மருதவிநாயகம், ஒன்றிய அம்மா பேரரவை இணை செயலாளர் முருகன், தூதுகுழி முத்தையா, ஐயப்பன், ராமையா, ஊராட்சி செயலாளர்கள் தர்மராஜ், அப்பாத்துரை, பேச்சிகுமார், அன்பில் நயினார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.