செய்துங்கநல்லூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு அவர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான் தலைமை வகித்தார். ஐயப்பன் முன்னிலை வகித்தார். கருங்குளம் மாரியப்பன், லாட்டரி முருகன், சிதம்பரம், கதிரேசன், வி.கோவில் பத்து செல்வராஜ், தூதுகுழி செந்தாமரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வசவப்புரம், அனவரதநல்லூர், வல்லநாடு , தெய்வச்செயல்புரம் ஆகிய இடங்களில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


