செய்துங்கநல்லூரில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை அமலா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் முத்துராஜ் மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் மாணவர்கள் பல்வேறு போட்டில் வெற்றி பெற செய்யவேண்டிய யுக்திகளை ஆசிரியர்கள் மாணவர்களிடையே பயிற்றுவித்தனர். கலை நிகழ்ச்சி நடந்தது.


