பயணிகளு க்கு இடைஞ்சலாக இருந்த மரக்கிளையை அப்புற படுத்த முயன்ற சாலை பணியாளர் தவறி விழுந்து இறந்தார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லகுளம் மணல்விளை மேலத்தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மகன் ராமலிங்கம் (55). இவர் ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சாலை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கருங்குளம் அருகே உள்ள புளியங்குளம் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் அவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வாகனங்களுக்கு இடையூறாக கிளை ஒன்று மரத்தில் தொங்கி கொண்டிருந்தது. காற்று அடித்தால் அது தவறி இருச்சக்கரத்தில் செல்பவர்கள் மீது விழுந்து உயிர் பலி ஏற்படுத்தி விடும். எனவே அந்த கிளையை அப்புறபடுத்தி விட வேண்டும் என ராமலிங்கம் மரத்தில் ஏறி கிளையை அரிவாளால் வெட்டி அப்புறப்படுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மரத்தில் இருந்து தவறி விழுந்து விட்டார்.
அப்போது உடன் வேலை பார்த்தவர்கள் அவரை 108 மூலமாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இறந்த ராமலிங்கத்துக்கு பூங்கோதை என்ற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். ராமலிங்கத்தின மறைவு அவர் கிராமத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.