கால்வாய் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டப்பட்டது.
இந்த கட்டிடம் திறப்பு விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார், உதவிபொறியாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். பள்ளி கட்டிடத்தினை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் திறந்து வைத்து பேசினார்.
கிராம புற மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணவேண்டும் என்பதற்காக இதுபோன்ற பள்ளி கட்டிடத்தினை தமிழக அரசு கட்டி வருகிறது. தற்போது இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து மேல்நிலைப்பள்ளியை உருவாக்க பொதுமக்களும் ஆசிரியர்களும் ஆர்வம் காட்டவேண்டும் என்று அவர் பேசினார்.
மத்திய மனித வள மேம்பாட்டுதுறை மற்றும் தமிழக அரசு இணைந்து இந்த பள்ளி கட்டிடத்தனை கட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருபாற்கடல் , ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சேர்மன் ஆறுமுக நயினார், ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் காசி ராஜன், கால்வாய் ஊராட்சி செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.