செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் 1480 பேர் பங்கேற்றனர்.
சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் வணிகவியல் துறையின் சார்பில் நடந்த தேர்வில் செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் 1480 பேர் பங்கேற்றனர். லோயர் பிரிவில் 5 பிரிவாக 955 பேருக்கும், ஹையர் பிரிவில் 4 பிரிவாக 525 பேருக்கும் தேர்வு நடந்தது.
தேர்வினை தலைமை கண்காணிப்பாளராக கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் பணியாற்றினார். துணை தலைமை கண்காணிப்பாளராக. மென் மேத்யூ, ஆறுமுகசேகர் ஆகியோர் பணியாற்றினர்.
அலுவலக கண்காணிப்பாளர் கணேசன், ஆசிரியர் முகமது பரூக், முருகன், மாரிராஜ் குமார், சீனிவாசன், காந்தி கொண்ட குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.