
நெல்லைசந்திப்பு ஜானகிராம் ஹோட்டல் அயோத்தி அரங்கில் வைத்து தாமிரபரணித் தமிழ்த் திருவிழாவில் 12 நூல்கள் வெளியிடப்பட்டது.
கால்கரை வெ.சுடலைமுத்துத் தேவரின் 15 வது நினைவு நாளையொட்டி நடைபெற்ற விழாவிற்கு பேராசிரியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அருணா சிவாஜி வாழ்த்து பாடல் பாடினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் சண்முகசுந்தரத்தின் காசுபிள்ளையின் சைவப்பெருமக்கள், பேராசிரியர் அ.கா.பெருமாளின் வையாபுரியாரின் கால ஆராய்ச்சி, பேராசிரியர் அழகேசனின் தொல்காப்பியரின் புலப்பாட்டு நெறி, முத்தாலங்குறிச்சி காமராசுவின் நெல்லைக்கோயில்கள் பாகம் 2, இரா. சிகாமணியின் சமய நல்லிணக்கம், சோம சுந்தரத்தின் என் இனிய வண்ணத்துப்பூச்சியே, நா.நாகராஜனின் அன்று ஆறு ஆறாயிருந்தது, ஜோசப் சொர்ணராஜின் குமரி வட்டார நாவல்களில் பின்புலம், மகேஷ்குமாரின் நினைவெல்லாம் என்னும் நாவல், புலவர் கு. ரவீந்தரன் குமரியில் கம்பர் மற்றும் வயக்காடு நாவல்கள், கோகுல் சங்கரின் கல்லு வீடு சிறுகதைதொகுப்பு ஆகியவை வெளியிடப்பட்டது. நூல்களை கவிஞர் கலாப்பிரியா வெளியிட்டார். கவிஞர் மு.சு.சங்கர், பேராசிரியர் செந்தீ நடராஜன், பேராசிரியர் பே.நடராஜன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக முனைவர் சி.சுதாகரன், பெட்காட் குமரிமண்டல ஒருங்கிணைப்பாளர் முகமது எகியா, மகேந்திரகரி ஆய்வு நிலைய உதவி மேலாளர்கள் ஜெ.ஸ்டாலின், தங்கராஜ், நாறும்பூநாதன், பேராசிரியர் ஹரிஹரன், கோவில்பட்டி நாகராஜன், மார்த்தாண்டம் ஷகிலா, பேராசிரியர் இராஜேஷ் ஆகியோர் நூல்களை பெற்றுக்கொள் கின்றனர். பேராசிரியர் வளனரசு, பேராசிரியர் சிவசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் சு.முருகேசன் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை காவ்யா பதிப்பகம் சார்பில் பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் செய்திருந்தார்.