நாட்டார்குளம் ஆர்.சி. பங்கு சார்பில் சேகரிக்கப்பட்ட பொருள்களை கஜா புயலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ் அனுப்பி வைத்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு இடத்தில் இருந்து நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது . அதுபோலவே நாட்டார்குளம் ஆர்.சி பங்குக்கு உள்பட்ட நாட்டார்குளம், முத்தாலங்குறிச்சி, ஆழிகுடி , வசவப்பபுரம், சேதுராமலிங்கபுரம் ஆர்.சி. பங்குக்கு உள்பட்ட இடங்கள், பாளையங்கோட்டை குழந்தை யேசு பள்ளி, நாட்டார்குளம் என்.என்.என். சங்கம் சார்பில் பொருள்கள் சேரிக்கப்பட்டது. இந்த பொருள்களை நாட்டார்குளம் சூசையப்பர் ஆலயத்தில் இருந்து அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பங்கு தந்தை இருதய சாமி தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் இன்னேஷ்குமார் முன்னிலை வகித்தார். பொருள்களை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சகாய ஜோஸ் லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
இந்த பொருள்கள் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் தாலூகா ஆச்சியாபுரம் என்னும் ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்காக அயராது உழைத்த மக்களை டி.எஸ்.பி. சகாய ஜோஸ் பாராட்டினார்.


