கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின கொண்டாட்டம் நடந்தது.
மாற்றுதிறனாளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது. இதில் இசை நாற்காலி, எலுமிச்சை ஓட்டம் மற்றும் வினாடி வினா போட்டி நடந்தது. போட்டியில் மாணவர்கள் ஹரிதாஸ், சுபா, சிவராஜா ஷிரீதா, தீபா, ஐஸ்வர்யா, ஸ்மைலின்மேரி ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு வேளாண்மைக் கல்லூரி முதல்வர் இராமலிங்கம் பரிசளித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் இராஜாபாபு செய்திருந்தார்.


