தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாத்தான்குளம் வட்டார கிளை மாநாடு யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். உதவியாளர் முகமது மீரான் இஸ்மாயில் வரவேற்றார். தொடர்ந்து இறந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டன. செயலாளர் அறிக்கையை உதவிச் செயலாளர் கோமதியும் ,பொருளாளர் அறிக்கையை ஊர் நல அலுவலர் தேவ பிரபுவும், தாக்கல் செய்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுதர்சன், பொருளாளர் முருகன், மாவட்ட தலைவர் ராஜன் ,இணை செயலாளர் ராஜேஷ் குமார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், சங்க மாநிலச் செயலாளர் ஆண்ட்ரூ ,மாவட்ட தலைவர் மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் புதிய தலைவராக சின்னத்துரை, செயலாளர் முகமது இஸ்மாயில் ,பொருளாதார பிரிவு துணைத் தலைவர்களாகக் கோமதி கிருஷ்ணன், இணைச் செயலாளர்களாக சக்திவேல் பேச்சியம்மா ,மாவட்ட செயற்குழு உறுப்பினராக வின்சன்ட் ,மகளிர் பிரதிநிதியாக முத்துலட்சுமி, கவிமலர்பிரிய, தர்ஷினி தேர்வு செய்யப்பட்டனர் .ஊரக வளர்ச்சித் துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு வழங்க வேண்டும் .விடுமுறை நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பணியாளர்களைப் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .சங்க செயற்குழு உறுப்பினர் சிம்சன் நன்றி கூறினார்


