தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை மாணவர்களுக்கு ஒளி ஒலி காட்சிப்படுத்த வானரம் பட்டி தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் பேராசிரியர்கள்
சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களங்களைப் பார்வையிட்டனர் .
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை மாணவர்களுக்கு காணொளி மூலம் காட்சிப்படுத்த வானரம்பட்டியிலுள்ள தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோல்டா கிரேனா ராஜாத்தி, பேராசிரியர்கள் ஸ்ரீனிவாசன், ரமணி , பாரதி ராஜன் ஆகியோர்
சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களங்களைப் பார்வையிட்டனர்.
சிவகளையில் தொல்லியல் கள இயக்குநர் பிரபாகர் தொல்லியல் பணியாளர் சுதாகர் பேராசிரியர்களை வரவேற்று சிவகளை தொல்லியல் களத்தின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினர். அவர்களுடன் ஆசிரியர் சிவகளை மாணிக்கம் உடனிருந்தார். அதைத் தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் இந்தியத் தொல்லியல்துறையால் நடத்தப்படும் அகழாய்வுகளைக் கண்டனர். அவர்களுக்கு தொல்லியல் அலுவலர் முத்துக்குமார் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தை விளக்கினார். ஆசிரியர் மாணிக்கம் உடனிருந்தார்.