தூத்துக்குடி அருகே மின் மோட்டாரை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள இடையர்காடு வடக்கு தெருவை சேர்ந்த சிவசக்திவேல் மகன் லிங்கதுரை(21).இவர் சாயர்புரம் அருகே தேரிரோட்டில் உள்ள தனியார் தும்பு ஆலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இன்று காலை கம்பெனியில் பழுதான மின் மோட்டாரை சரி செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக உடலில் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


