வடகிழக்கு பருவமழை காரணமாக தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 20ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக உபரிநீராக கடலுக்கு வெளியேறுகிறது.
மருதூர் அனையிலிருந்து 17ஆயிரத்து900கன அடிநீர் அணையிலிருந்து வெளியேறுகிறது. மழைநீரால் குளங்கள் நிரம்பியுள்ளதால் அதிலிருந்து பிரியும் மேலக்கால் கீழக்கால்
வாய்க்கால்கள் அடைக்கப்பட்டன. ஶ்ரீீீவைகுண்டம் அணையிலிருந்து பிரியும் வடகால் தென்கால் வாய்க்கால்கள் அடைக்கப்பட்டுள்ளன.ஶ்ரீீீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக அதிகளவில் காலை முதலே பெய்த பலத்த மழையில் பல குளங்கள் நிரம்பின.குறிப்பாக மணிமுத்தாறு பாசனம், தெற்குகாரசேரி குளம், கிளாக்குளம் ஆகிய குளங்கள் நிரம்பி மறுகால் விழுந்தது. இதனால் தண்ணீர் மருதூர் மேலக்காலில் கலக்கும் இடத்திலும் வெள்ளம் அதிகமாக வந்ததால் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
கிளாக்குளம் மேலத்தெரு, வடக்கு தெரு, கீழத்தெரு,மேலத்தெரு, குருக்கள் கோட்டை போன்ற பகுதியில்உள்ள சுமார் 100 வீடுகளை வெள்ள நீர் புகுந்தது. உடனடியாக கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதிராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நயினார், ஒன்றிய அலுவலர் முருகன், கிளாக்குளம் கிராம நிர்வாக அலுவலர் மைதிலி,தெற்கு காரசேரி கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு, கருங்குளம்பஞ்சாயத்து செயலர் தங்கம்மாள்தெற்குகாரசேரி பஞ்சாயத்து செெயலர் முருகன் ஆகியோர் கிளாக்குளம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்தமக்களை மீீீட்டு கிளாக்குளம் வெங்கடாசலபதி கோயிலில்தங்கவைத்தனர். அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்கி வருகின்றனர். வீடுகளுக்கு புகுந்த மழைநீரை பல்வேறு இடங்களில் ஜேசிபி வாகனம் மூலம் தண்ணீரை திருப்பி விட்டனர் இதனால் கிராமத்தி உள்ள மழைநீர் வடிந்து வருகிறது .மேலும் தாதன்குளத்தில்இருந்து கிளாக்குளத்துககு செல்ல பயன்படுத்தி வந்த ரயில்வேசுரங்கப் பாதை மீண்டும் தண்ணீரில் மூழ்கியது. இந்த மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.மங்கம்மாள் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது ஓடியதால்சாலைதுண்டிக்கப்பட்டது.இதனால் கிராம மக்கள் வல்லகுளம் ,தெற்கு காரசேரி வழியாக சுமார் 10 கிலோமீட்டர் கூடுதலாகச் சுற்றி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
இதே போல் கால்வாய் கிராமத்திலும், நேற்று அதிகாலை 3 மணி அளவில் கனமழையின் காரணமாக ஸ்ரீவைகுண்டம் தாலுகாவை சேர்ந்த அரசகுலம் , வல்லகுளம், கிளாக்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக காட்டு ஆறுகளிலும் விவசாய பாசனக் கால்வாய்களிலும் பெருவெள்ளம் ஏற்பட்டு அதில் வரக்கூடிய உபரிநீர் கால்வாய் குளத்தில் பெருகி மீண்டும் வெள்ளூர் குளத்திற்கு சேர நீர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு
ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் அருள், ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அண்ணராஜ், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன்,மற்றும்பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நவீன் பிரபு அறிவுரையின் பெயரில் வேலூர் கஸ்பா மற்றும் கால்வாய் ஊரைச் சார்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் பொருநை நதி நீர் மேலாண்மை சங்கம் போன்ற அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்..அப்போது அப்பகுதி மக்கள் சிலர் அதிகப்படியான உபரி நீரை அவசர காலத்தில் தடுப்பு சுவரை உடைத்து நீரை வெளியேற்ற சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர வைத்து அதனால் பாதிக்கப்படக்கூடிய கிராமங்களான வெள்ளூர், கால்வாய், மார்த்தாண்ட நகர், மாரியம்மாள் புரம் ,திடல் காலனி புதுக்குடி , நவலடியூர்,புளியங்காய்காலனி,மழவராயநத்தம்,ஆழ்வார்திருநகரி வரை மேற்படி வெள்ளூர் குளம் தானாகவே உடைந்து சென்றால் மிகப் பெரும் பாதிப்பு ஏற்படும் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் பயிர் செய்யப்பட்டுள்ள நெல் மற்றும் வாழை விவசாயம் பெருமளவில் சேதம் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத்தில் தடுப்புச்சுவர் ஜேசிபி எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு பெருவாரியான வெள்ளம் வெளியேற்றப்பட்டது இதனால் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அதிகாரிகளின் செயலால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது