சின்னார்குளத்தில் போலிசார் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடந்தது.
சேரகுளம் அருகே உள்ள சின்னார்குளத்தில் பெருமாள் கோவில் வளாகத்தில் வைத்து போலிசார் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு சேரகுளம் உதவி காவல் ஆய்வாளர் மகேஷ் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், இளைஞர்கள் வேலைவாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும். பைக்கில் மூன்று பேர் செல்லக்கூடாது. முகக்கவசம் அணிய வேண்டும். ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், பெண்கள் சரியான முறையில் ஆடைகள் அணிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சின்னார்குளம் ஊரைச் சேர்ந்த ரத்தினசாமி, முத்துப்பாண்டி, பட்டாணி, முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.