சேரகுளம் காவல் நிலையத்தில் தசரா குழுவினருடன் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா. ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளம் காவல்நிலையத்தில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள தசரா குழுவினருடன் சேரகுளம் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு சேரகுளம் உதவி காவல் ஆய்வாளர் மகேஷ் தலைமை வகித்தார். அந்த கூட்டத்தில் தசரா திருவிழாவை உள்ளூர் கோவில்களிலேயே முடித்துக்கொள்ளவும் வேஷம் கட்டி வெளியூர் செல்லக்கூடாது எனவும், மேலும் மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இந்த கூட்டத்திற்கு அரசர்குளம், கிளாக்குளம், மணல்விளை, அரியநாயகிபுரம், சின்னார்குளம் உள்பட பல கிராமத்தைச் சேர்ந்த தசரா குழுவினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.