கருங்குளத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு 100 மாணவ மாணவிகளுக்கு எழுது பொருள் வழங்கப்பட்டது. கருங்குளம் விஸ்வகர்ம சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் கோயிலில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் 100மாணவ மாணவிகளுக்கு இலவச எழுது பொருள் வழங்கப்பட்டது. பொருள்களை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து கிளார்க் சங்கரபாண்டியன் குடும்பத்தார் செய்திருந்தனர்.