சாத்தான்குளம் கூட்டுறவு வங்கி முன்பாக உள்ள அலுவலகத்தில் பா.சிவந்திஆதித்தனாரின் 86- வது பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.தி.மு.க மாவட்ட விவசாய துணைத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினர்.ஒன்றிய சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் நேசன்குமார் மற்றும் நகரக் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் வேணுகோபால் முன்னிலை வகித்தனர்.நகரச் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற சரவணசுந்தர் வரவேற்பளித்தார். நகர திமுக வர்த்தக அணி கிங்பிரபு,வழக்கறிஞர் கோபால்,ஒன்றிய பனங்காட்டு மக்கள் கழகம் செயலாளர் வினோஷ்,மதுரம் செல்வராஜ் ,வர்த்தக சங்க செயலாளர் துவர்குளம் அமலபெனிடன்,மாணவரணிச் செயலாளர் சிவசுப்பிரமனியன்,தி.மு.க EX நகரச் செயலாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற ஒன்றிய செயலாளர் ராஜாசேனாதிபதி நன்றியுரையற்றினார்.