
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடற்புழு நீக்கும் முகாம் நடைபெற்றது. முகாமினைக் கல்லூரி முதல்வர் முனைவர் சின்னத்தாய் தொடங்கி வைத்தார். ஆனந்தபுரம் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய செவிலியர்கள் கிறிஸ்டி( SHN) மற்றும் கிரிட்டா செல்வமேரி கல்லூரி மாணவியர்களுக்கு அல்பேண்டஸோல் ஐ. பி. 400 மி. கிராம் மாத்திரைகளை வழங்கினர். முகாமினை நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் உமாபாரதி, வளர்மதி மற்றும் இளஞ்செஞ்சிலுவைச் சங்கத்திட்ட அலுவலர் முனைவர் சண்முகப் பிரியா ஆகியோர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.