சாத்தான்குளம் தீயணைப்பு – மீட்புப் பணிகள் நிலைய பணியாளர்கள் சார்பில் முதலூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.இதில் Dr. ஐசிலீன் மோரீஸ் முன்னணி வகித்தார்.சுகாதார ஆய்வாளர் கிறிஸ்தோபர்,தீயணைப்பு மற்றும் நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினர். தீயணைப்பு வீரர்கள் தீ தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் செவிலியர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் பயனடைந்தார்கள்.


