சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100வது ஆண்டு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100வது ஆண்டின் 8வது செயற்குழு கூட்டம் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெகதீசன் தலைமை வகித்து பேசுகையில், “டெல்லியில் வருகிற 24ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் தான் பங்கேற்று வலியுறுத்த உள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஸ்ரீநிவாசன் சிறப்புரை ஆற்றி பேசுகையில், “100வது ஆண்டில் அடி எடுத்து எடுத்து வைத்துள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் டிசிடபிள்யூ நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறித்து பேசினார்.
இதில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் செல்வம், இணைச் செயலாளர் கணேசன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை டிசிடபிள்யூ நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் பிரகாஷ் செய்திருந்தார்.


