1865 – இலங்கையில் இராணுவ செலவீனங்களை விசாரிக்கும் பொருட்டு அரச ஆணைக்குழு அமைக்கப்பட்டது.[3]
1868 – தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை கிறித்தோபர் சோலசு பெற்றார்.
1894 – பியர் தெ குபர்த்தென்னின் முன்னெடுப்பில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு பாரிசில் அமைக்கப்பட்டது.
1940 – இட்லர் மூன்று மணித்தியால சுற்றுப் பயணமாக பாரிசு சென்றார். ஒரேயொரு தடவை மட்டுமே அவர் பாரிசு சென்றார்.
1940 – என்றி லார்சன் வடமேற்குப் பெருவழியால் மேற்கில் இருந்து கிழக்கு வரையான பயணத்தை வான்கூவரில் இருந்து ஆரம்பித்தார்.[4]
1941 – இலித்துவேனிய செயற்பாட்டு முன்னணி சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்து, இடைக்கால அரசை அமைத்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் போர் வானூர்தி வேல்சில் தவறுதலாகத் தரையிறங்கிய போது கைப்பற்றப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுசுவித்சு வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.
1946 – கனடாவின் வான்கூவர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1960 – பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
1961 – பனிப்போர்: அண்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடை செய்யும் அண்டார்டிக்கா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1967 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் சோவியத் பிரதமர் அலெக்சி கொசிஜினை நியூ செர்சியில் சந்தித்தார்.
1980 – இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார்.
1985 – அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.
2001 – பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 Mw நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.
2010 – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது.
2016 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் 52 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
2017 – பாக்கித்தானில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 96 பேர் கொல்லப்பட்டனர்.


