ஈ.வெ.கி.ச.இளங்கோவன் தமிழக அரசியல்வாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சரும் ஆவார்.
இவர் திசம்பர் 21, 1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சென்னை மாநில கல்லூரியில் பி. ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார்.
இவர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் அவர் மகன் ஈ. வெ. கி. சம்பத் அவர்களின் மகனும் ஆவார். இவரின் தாயார் ஈ. வெ. கி. சுலோசனாசம்பத் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்பு செயலாளராக இருந்தார். இவரது மனைவி பெயர் வரலட்சுமி, இவருக்கு திருமகன் ஈவெரா, சஞ்சய்
ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
, கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, (214477) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பின்னர் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினர்
• அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்
• தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர்,
• தமிழக காங்கிரஸ் தலைவர்
• மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்தார்.


