சைவசித்தாந்த நூல் பதிப்பு கழகம், விகடன், தி தமிழ் திசை இந்து, தினத்தந்தி, தினகரன், காவ்யா போன்ற பதிப்பகங்களில் நூல் எழுதி வந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தற்போது தினமலர் தாமரை பதிப்பகம் மூலமாக வரங்களை அள்ளித்தரும் வல்ல நாடு சித்தர் என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார். இந்த நூல் இன்று வெளியாகி உள்ளது. இதன் விளம்பரம் சென்னை தினமலர் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. இந்த நூலை தாங்கள் பெற 18004257700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நூலைப் பெற்றுக்கொள்ளலாம். நூலின் விலை ரூ260 ஆகும். இந்த நூல் வெளிவரக் காரணமாக இருந்த தாமரை மீடியா குழுமத்திற்கும், என்னை அறிமுகம்செய்த எழுத்தாளர் பிரபு சங்கர் அய்யா அவர்களுக்கும், மேலும் உதவிய பகவதி முத்து அய்யா அவர்களுக்கும், பிழை திருத்த உதவிய இளங்கோ அய்யா அவர்களுக்கும், தொடர்ந்து வாய்ப்புகள் தரும் வாசகர்களான உங்களுக்கும் நன்றி – எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு