பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றில் நெருப்பைத் தவிர அனைத்துமே உயிர்கள் வாழ ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது. ஆனாலும் நிலம் எனப்படும் பூமியில் மட்டுமே தாவரங்கள் முதல் மனிதர்கள் வரை அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழல் அமைந்துள்ளது. அந்த பூமியின் ஒரு அங்கமாகத்தான் காடுகள் உள்ளது. பல்லுயிர்த் தன்மை நிலைபெற மிக முக்கியமான இடமாகக் கருதப்படுவது காடுகள்.பல்லுயிர்ச் சூழல் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே உயர்த்தும் ஒரு படிக்கட்டாக உள்ளது. எனவே
காடுகளைக் காப்போம்!
பல்லுயிர்த் தன்மையை பெருக்குவோம்!*
நேற்று உலக குருவிகள் தினத்தை கொண்டாடி இருப்பீர்கள். உலக காடுகள் தின வாழ்த்துக்களுடன் ஆழ்வை ஆயில்யன்


