அமுதம் நியாயவிலைக் கடையில், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் ஆறுமுகநேரியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அமுதம் நியாய விலை கடையை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது ரேஷன் பொருட்கள் வாங்க வருகை தந்திருந்த குடும்ப அட்டதாரர்களிடம் தங்களுக்கு எவ்வித தங்கு தடைகளும் இன்றி உணவுப் பொருட்கள் பெற முடிகிறதா எனவும் தரமான உணவு பொருட்கள் கிடைப்பது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டு அறிந்தார்.அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் உள்ள உணவுப் பொருட்கள் தரமாக உள்ளதா உரிய நேரத்தில் உணவு பொருட்கள் நியாய விலை கடைகளுக்கு நகர்வு செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு பொது விநியோகத் திட்டத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் பாமாயில் சப்ளை செய்யும், சிப்காட் வளாகத்தில் உள்ள கேடிஜி ஆயில் மில்லில் பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படும் பாமாயில் ஓபன் மார்க்கெட்டில் வழங்கப்படும் பாமாயிலின் தரத்திற்கு ஈடாக உள்ளதா எனவும் பாமாயில் தயாரிப்பு முறைகள் பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பது குறித்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது உணவுத்துறை அமைச்சர் அவர்களுடன் தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரா.ராஜேஷ், துணைப் பதிவாளர் அ.சுப்புராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தூத்துக்குடி மண்டலம் மேலாளர் பொறுப்பு சிவகுமார், குடிமை பொருள் குற்ற பொருளாளர் துறை துணை காவல் கண்காணிப்பாளர் இரா.சரவணகுமார் மற்றும் தூத்துக்குடி வட்ட வழங்கல் அலுவலர் ஞ.ஞானராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.


