அமலி நகரில் தூண்டில் பாலம் அமைக்க கோரி மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் கடற்கரையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகரில், சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது போல் தூண்டில் பாலம் அமைக்க கோரி மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி படகுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இன்று 2வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் குடும்பத்துடன் கடற்கரையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தை முன்னிட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


