செல்வராகவன் பிறப்பு: 5 மார்ச்சு 1976) ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார்.
செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.


